திருநெய்ப்பேறு வன்மீகநாதர் திருகோயில், திருவாரூர்
முகவரி
திருநெய்ப்பேறு வன்மீகநாதர் திருகோயில், திருநெய்ப்பேறு, மாவூர் – அஞ்சல், திருவாரூர் மாவட்டம் – 610202.
இறைவன்
இறைவன்: வன்மீகநாதர் இறைவி: உமாபரமேஸ்வரி
அறிமுகம்
திருநெய்ப்பேறு வன்மீகநாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். இக்கோயில் அடியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 8 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் வன்மீகநாதர் ஆவார். இறைவி உமாபரமேஸ்வரி ஆவார். இவ்வூர் நமிநந்தியடிகள் அவதரித்த பெருமையுடையதாகும். திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சனீசுவரர், சூரியன் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் இறைவி சன்னிதி உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, மகாவிஷ்ணூ, துர்க்கை உள்ளனர். முன்மண்டபத்தில் அம்பாள் சந்நிதி. நேரே மூலவர் தரிசனம் – நெடுந்துயர்ந்த பாணம். கோயிலில் நுழைந்ததும் இடப்பால் நமிநந்தியடிகள் (மூலத்திருமேனி) எண்ணெய்க் குடுவையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருநெய்ப்பேறு
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி