சேசை சிவன் கோவில், மத்தியப் பிரதேசம்
முகவரி
சேசை சிவன் கோவில், சேசை சதக், ஷிவ்புரி மாவட்டம் மத்தியப் பிரதேசம் – 473774
இறைவன்
இறைவன்: சிவன் இறைவி: பார்வதி
அறிமுகம்
சேசை மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த இடம் புகழ்பெற்ற சமண யாத்திரை தலமாகும். 10 ஆம் நூற்றாண்டில் பிரதிஹாரா ஆட்சியாளர்களால் இந்த கோவில் கட்டப்பட்டது. பிரதிஹாரர்கள் சூரியன் கோவில் மற்றும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய கோவில் ஆகிய இரண்டு கோவில்களை கட்டியுள்ளனர். இந்த சிவன் கோவில் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது, லிங்கம் மற்றும் நந்தி மட்டுமே தற்போது உள்ளது.
புராண முக்கியத்துவம்
இந்த சிறிய கோவில் அதன் ஷிகாரம் மற்றும் முக மண்டபம் உட்பட பல அம்சங்களை இழந்துள்ளது. கோவில் மேற்கு நோக்கியுள்ளது. கருவறை வாசலில் அடிவாரத்தில் நதி தேவதைகள் உள்ளனர். கருவறைக்குள் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. பஞ்சகினிதாபத்தில் பார்வதி வடக்கு பத்ரா இடத்திலும், சூரியன் கிழக்கு இடத்திலும் இருக்கிறார். தெற்கு பத்ரா இடம் தற்போது காலியாக உள்ளது.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
படோரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஷிவ்புரி
அருகிலுள்ள விமான நிலையம்
குனா, குவாலியர்