சூரனூர் சூரியனேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
சூரனூர் சூரியனேஸ்வரர் சிவன்கோயில், சூரனூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101.
இறைவன்
இறைவன்: சூரியனேஸ்வரர்
அறிமுகம்
சூரியனுக்கு உரிய கோயில்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட கோயில்களில் திருவாரூர்- நாகூர் சாலையில் 15 கிமி தூரத்தில் இருக்கும் சூரனூர் எனும் தலமும் ஒன்று. சூரன் என்றால் சூரியன் என பொருள், இங்கு இரு கோயில்கள் உள்ளன. ஒரு சிவன்கோயில் பிரதான சாலையின் வடக்கில் உள்ளது. அதன் பெயர் தர்மபுரீஸ்வரர் கோயில். மற்றொரு கோயில் ஊரின் தெற்கில் ஐயனார் கோயில் மேட்டில் உள்ளது. இங்கு முன்னொரு காலத்தில் ஒரு பெரிய கோயில் ஒன்றிருந்திருக்க வேண்டும். அங்கிருந்த பெரிய லிங்கமும், ஒரு பெரிய விநாயகர் சிலையும் தனித்து இருந்தன, தற்போது ஐயனார் கோயில் புதுப்பிக்கும் போது இதற்க்கு ஓர் தனி கொட்டகை அமைத்துவிட்டனர். இறைவனுக்கு இங்கே பெயரில்லை, நாம் அவரை சூரியனேஸ்வரர் என அழைப்போம். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சூரனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி