Friday Nov 22, 2024

சித்தர்கள் போற்றும் அத்ரிமலை திருக்கோயில்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிபாரத்தில் அமைந்துள்ளது அத்திரி தபோவனம். இத்தலத்திற்கு சென்று வந்தால் கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகின்றது.

வடக்கே உள்ள கேதார்நாத் திருத்தலம் போன்று தெற்கே மகிமை பெற்று திகழ்கின்றது அத்ரிநாத் எனப்படும் அத்ரிமலை கோயில். அகத்தியர் பொதிகை மலைக்கு வருவதற்கு முன்பே இந்த பகுதியில் அத்ரி மகரிஷி வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.

இந்த மலைக்கு வந்து வழிபட்டால் அத்ரி, அகத்தியர், கோரக்கர் போன்ற தவசீலர்களின் திருவருளை பெறுவதுடன் சிவனாரின் அனுகிரகத்தையும் பரிபூரணமாக பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்திருக்கோயிலை வலம் வரத் துவங்கினால் இடதுபுறம் இரட்டை விநாயகர்கள், வலப்புறம் மகிஷாசுர வர்த்தன், அத்திரி, அகத்தியரும் காட்சி தருகின்றனர்.

இக்கோயிலின் தென்புறச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி கோயிலின் பின்புறத்தில் பிரம்மாவும், வடக்கு புறச்சுவற்றில் விஷ்ணுவும் எதிர்ப்புறம் சாஸ்தாவும் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் முன்பு வந்தால் தேவியருடன் அருளும் முருகனைத் தரிசிக்கலாம்.

கருவறைக்கு எதிரில் நந்தியும், இருபுறமும் முருகரும் விநாயகர் அவர்களை வணங்கி விட்டு கருவறையில் தரிசிக்க செல்லலாம். இக்கருவறையில் சிவசக்தி அம்சமாக இரண்டு லிங்க மூர்த்திகளும் ஒன்று ஈஸ்வரனும் என்பட்டை பானத்துடன் திகழும் மற்றொன்று அம்பாளின் அம்சமாகும்.

பௌர்ணமி தினங்களில் இங்கு வந்து ஆகாய கங்கையில் நீராடி பால் சமர்ப்பித்து அம்பாலையும் சுவாமியையும் வழிபட்டால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். அதே போல அமாவாசை தினங்களில் வந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top