Tuesday Jan 07, 2025

சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில்

முகவரி :

சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில்,

சவுத் பிரிட்ச் சாலை, சைனா டவுன்,

சிங்கப்பூர் – 058593.

இறைவி:

மகா மாரியம்மன்

அறிமுகம்:

மாரியம்மன் கோயில் சிங்காப்பூரில் சைனா டவுன் என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் கோயில் ஆகும். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில். இக்கோவில் 1973 ஜூலை 6 அன்று தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூர் அரசால் அறிவிக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம்கடலூர்  போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூரில் தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827-இல் அமைக்கப்பட்டது. மாரியம்மனை முதற்தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும்  அமைத்துள்ளார்கள்.

புராண முக்கியத்துவம் :

இக்கோயில் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் நாராயண பிள்ளை என்பவர் ஆவார். கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்கக் கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822-ல் ஆண்டில் முன் வந்தது. 1823-ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது. 1827-ல் கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் எடுத்து வந்த அம்மன் சிலையை மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து சின்ன அம்மன் என்ற பெயரில் பிரஷ்டை செய்து வழிபாடு தொடங்கப்பட்டது. அந்த அம்மனே இன்று மகா மாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது.

16 ஆண்டுகளுக்குப் பின் சிறு அளவிலிருந்த கோயில் 1862-இல் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போதுள்ள மூலவரான பெரிய அம்மன் எப்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. அதன்பின் சுமார் 100 ஆண்டுகள் மாற்றமின்றி இருந்த ஆலயம்,1962–ல் இப்போதுள்ள நிலையில் மாற்றம் கண்டது. புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் திருமண மண்டபம், அரங்கம் போன்றவையும் கட்டப்பட்டன. சிங்கப்பூர் அறக்கட்டளை வாரியத்தினால் இவ்வாலயம் தற்போது நிர்வகிக்கப்படுகிறது. 1936 ஜூன் மாதத்தில் முதல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் 1949, 1977, 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்குகள் நடைபெற்றன.

திருவிழாக்கள்:

                            அக்டோபர்/நவம்பரில் திரௌபதியம்மனுக்கு தீ மிதிப்பு விழா நடக்கிறது. இத்திருவிழா 1842 முதல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. நவராத்திரி, 1008 சங்காபிஷேகம், மகா சத சண்டி யாகம், நவசக்தி அர்ச்சனை, திரெளபதை உற்சவம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.

காலம்

1862 ஆம் ஆண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஹோப் ஹாங் லிம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிங்கப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சிங்கப்பூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top