சந்தேபச்சல்லி மகாலிங்கேஸ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி :
சந்தேபச்சல்லி மகாலிங்கேஸ்வரர் கோயில்,
சந்தேபச்சஹள்ளி, மாண்டியா மாவட்டம்,
கர்நாடகா – 571436.
இறைவன்:
மகாலிங்கேஸ்வரர்
அறிமுகம்:
மகாலிங்கேஸ்வரர் கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள சந்தேபச்சல்லி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஹொய்சலா கால கட்டிடக்கலையை பின்பற்றுகிறது மற்றும் கிபி 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு மூலவர் லிங்க வடிவில் மகாலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவில் இந்திய தொல்லியல் துறையின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இது ஒரு ஏககூட சன்னதி. இக்கோயில் மூடிய மண்டபம், அந்தராளம் மற்றும் கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கோவில் முறையாக பராமரிக்கப்படாததால், இங்கு பூஜைகள் நடைபெறுவதில்லை.
இந்த கோயில் ஷ்ரவணபெலகோலாவிலிருந்து 15 கிமீ தொலைவிலும், ஷ்ரவணபெலகோலா ரயில் நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவிலும், பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 167 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கோவில் ஷ்ரவணபெலகொலா முதல் நாகமங்கலா வழித்தடத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் இந்த வழித்தடத்தில் பயணித்து, அகலாயாவுக்கு முன் இடதுபுறம் திரும்பி, சுமார் 8 கிமீ பயணம் செய்து இந்த கோயிலை அடைய வேண்டும்.
காலம்
கிபி 12 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஷ்ரவணபெலகொலா
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஷ்ரவணபெலகொலா
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்