கோவங்குடி கோமுக்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
கோவங்குடி கோமுக்தீஸ்வரர் சிவன்கோயில்,
கோவங்குடி, மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609806.
இறைவன்:
கோமுக்தீஸ்வரர்
அறிமுகம்:
மயிலாடுதுறை – சித்தர்காடு –மறையூர்- கோவங்குடி என வரவேண்டும், சித்தர்காட்டில் இருந்து நான்கு கிமீ தூரம் இருக்கும். இறைவனும் இறைவியும் ஒருமுறை சொக்கட்டான் ஆடியபோது இறைவி பொய்யாக தான் வென்றதாக கூற, திருமாலும் அதற்கு துணை நிற்க இருவரையும் இறைவன் சபிக்கிறார், இறைவி பசுவாக மாறி பல தலங்கள் சுற்றி திரிந்து திருஆவடுதுறையில் முக்தி பெறுகிறார்.
அம்பிகை பசுவாகவும், திருமால் மேய்ப்பனாகவும் பூமிக்கு சாபம் பெற்றுவந்த கதையில் தேரழுந்தூர், பில்லூர், ஆனாங்கூர், திருக்குளம்பியம், திருவாவடுதுறை, குற்றாலம், எதிர்கொள்பாடி, வேள்விக்குடி, குறுமுளைப்பாலி, திருமணஞ்சேரி என்று இத்தனை ஊர்களைப் பற்றிய தல புராணங்கள் ஒன்று சேர்ந்து ஒரே கதையை தொடர்ச்சியாக கூறுகிறது; பசுவாக மாறிய அம்பிகை வந்து தங்கிய இடம் என்பதால் கோ வந்த குடி எனப்படுகிறது. தற்போது கோவங்குடி எனப்படுகிறது. இறைவன் – கோமுக்தீஸ்வரர்.
மஞ்சளாற்றின் தென் பகுதியில் இவ்வூர் உள்ளது. சிறிய ஊர்தான், ஊரின் கிழக்கு பகுதியில் பெரிய குளத்தின் கரையில் பெரிய சிவன் கோயிலாக இருந்ததாகவும், காலப்போக்கில் சிதைவடைந்த பின்னர் இருந்த லிங்கம் மற்றும் சில மூர்த்திகளை ஒரு தகர கொட்டகையில் சில தொண்டுள்ளங்கள் வைத்துள்ளன. கோயில் இருந்த குளக்கரை இடத்தில் தற்போது ஒரு சமுதாயக்கூடம் கட்டப்பட்டு விட்டதாக கூறுன்றனர். கேட்பாரில்லை!!
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோவங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி