கோர்வாங்லா கோவிந்தேஸ்வரர் மற்றும் நாகேஸ்வரர் கோவில், கர்நாடகா
முகவரி
கோர்வாங்லா கோவிந்தேஸ்வரர் மற்றும் நாகேஸ்வரர் கோவில், கோர்வாங்லா, கர்நாடகா – 573118
இறைவன்
இறைவன்: கோவிந்தேஸ்வரர் மற்றும் நாகேஸ்வரர்
அறிமுகம்
கோர்வாங்லா கிராமம் ஹாசன் நகரின் தென்மேற்கிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஹொய்சாலா ஆட்சியின் போது, இந்த கிராமம் சீகெனடியின் முக்கியமான அக்ரகாரமாக இருந்தது. புச்சேஷ்வர், கோவிந்தேஷ்வர் மற்றும் நாகேஷ்வர் ஆகிய கோவில்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த இடிபாடுகள் புச்சேஸ்வரர் கோவிலுக்கு எதிரே உள்ளன. இக்கோயில் வளாகம் நாகேஸ்வரர் மற்றும் கோவிந்தேஸ்வரர் ஆலயத்தைக் கொண்டுள்ளது. இரண்டு கோவில்களிலும் உள்ள சிலைகள் காணவில்லை. கோர்வாங்லா கிராமம் ஹொய்சாலாவின் ஆட்சிக்காலத்தில் உள்ள நகரமாக இருந்திருக்க வேண்டும். கிபி 1160-இல் புச்சி ராஜாவின் சகோதரர்களால் நாகேஸ்வரர் மற்றும் கோவிந்தேஸ்வரர் கட்டப்பட்டது. அவை இடிந்த நிலையில் தற்போது உள்ளன. வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், இரட்டை கோவில்களை மீண்டும் தங்கள் பழைய நிலைக்கு மீட்டெடுக்க முயன்றனர், ஆனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோர்வாங்லா
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோர்வாங்லா
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்