Friday Nov 22, 2024

கொத்தங்குடி கயிலாசநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி :

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்,

அண்ணாமலை நகர் அஞ்சல், சிதம்பரம் வட்டம்,

முத்தையாநகர் சி.கொத்தங்குடி,

கடலூர்-608002.

போன்: +91 94435 38084, 78715 65728

இறைவன்:

கயிலாசநாதர்

இறைவி:

காமாட்சியம்மன்

அறிமுகம்:

சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை பல்கலை செல்லும் வழியில் 2 கி. மீ.,தொலைவில் உள்ளது கோயில். கொற்றவன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் அவர் பெயரால் கொற்றவன் குடி என்பது மருவி கொத்தங்குடி என்றாகியது. அப்பகுதியில் அண்ணாமலை பல்கலைக்கழ இணைவேந்தர் பெயரில் நகர் அமைத்தமையால் முத்தையா நகர் என அழைக்கப் படுகிறது.

புராண முக்கியத்துவம் :

நகரில் 1995 புதியதாக கட்டப்பட்ட செல்வ முத்துத் விநாயகர் கோயில் 2008 இல் கும்பாபிஷேகம் நடத்த ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அந்தக்கூட்டத்தில் தற்போதுள்ள விநாயகர் கோயில் தவிர சிவன் கோயில் அமைக்கவும், விநாயகர் கோயிலை புரணமைத்துத் கும்பாபிஷேகம் நடத்தலாம் என முடிவு செய்தனர். அதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒப்புக் கொண்டனர். அதன் பின் ரூ.16 லட்சம் செலவில் கைலாசநாதர், காமாட்சியம்மன், கஜலட்சுமி, வினாயகர், முருகன், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வ மூர்த்திகளுடன் புதிய கோயில் கட்டப்பட்டது. கோயில் கட்ட முதற்கட்டமாக பூஜ்ய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்ரீசரணர்கள் அனைத்துத் தெய்வமூர்த்தி சிலைகளையும் இவலசமாக வழங்கி, அருளாசி வழங்கினர். அவர்களின் ஆசிபடி வெகு விரைவில் நடந்தேறியது. இறைவன் ஈசன் அருளால் கோயில் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் 2010 ஜூன் 10ம் தேதி திரயோதசி திதியும், அனுஷ நட்சத்திரமும், சித்தயோகமும், சாத்யயோகமும் கூடிய சுபயோக தினத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீவிஜயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தி வைத்தனர்.

நம்பிக்கைகள்:

கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம் மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விளங்குவதால் பக்தர்கள் ஏராளமானோர் வந்து பிராத்திக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

கிழக்குப்பக்கம் வாயில், நுழைவு வாயில் முன் வேம்பு, அரசன் மற்றும் வில்வம் தல விருட்சம் மரம் உள்ளது. மகா மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். தெற்குப் பக்கம் பார்த்து அம்பாள் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் பலி பீடம் மற்றும் நந்தி மேற்கு பக்கம் தலை சாய்ந்த நிலையில் படுத்துள்ளது. கிரானைட் தரை தளம், வலது பக்கம் சுப்பிரமணியர், இடபக்கம் விநாயகர் அருள்பாலிக்கின்றனர். உள்பிரகாரத்தில் கயிலாயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஈசன் அருள்பாலிக்கின்றார். வெளிபிரகாரத்தில் தெற்கு பக்கம் பார்த்த வண்ணம் நந்தி வணங்கும் கோலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியும், வடக்கு பக்கம் பார்த்த வகையில் விஷ்ணு துர்க்கையும், தெற்கு பக்கம் பார்த்த வகையில் சண்டிகேஸ்வரரும், அவரை வணங்கி சென்றால் நவக்கிரகங்களை வணங்கி சென்றால் கோயில் நுழைவு வாயிலை சென்றடையலாம்.

திருவிழாக்கள்:

சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, பிரதோஷம், நகராத்திரி உள்ளிட்டவை முக்கிய திருவிழாக்களாகும்.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முத்தையாநகர் சி.கொத்தங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top