Friday Dec 27, 2024

கூத்தூர் நாராயனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி :

கூத்தூர் நாராயனேஸ்வரர் திருக்கோயில்,

கூத்தூர்,

தஞ்சாவூர் மாவட்டம் – 613203.

இறைவன்:

நாராயனேஸ்வரர்

இறைவி:

அதலாம்பிகை

அறிமுகம்:

கூத்தூர், இந்த சின்னஞ் சிறிய கிராமத்தில் உள்ளது நாராயனேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘நாராயனேஸ்வரர்’. இங்குள்ள இறைவியின் பெயர் தான் அதலாம்பிகை. தாள இயலாத குடும்ப பிரச்சினைகள், தவிர்க்க முடியாத இடர்பாடுகள். இல்லத்தில் நிம்மதி இல்லை. இப்படி பல பிரச்சினைகளால் கலங்கி நிற்கும் மக்கள் அன்னை அதலாம்பிகையிடம் வருகின்றனர். அந்த அன்னையே இவ்வளவு பெருமைக்கும் உரியவள். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கூத்தூர் என்ற இந்த தலம் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

 தாள இயலாத குடும்ப பிரச்சினைகள், தவிர்க்க முடியாத இடர்பாடுகள். இல்லத்தில் நிம்மதி இல்லை. இப்படி பல பிரச்சினைகளால் கலங்கி நிற்கும் மக்கள் அன்னை அதலாம்பிகையிடம் வருகின்றனர். அன்னையின் சன்னிதியில் முன் நின்று கண்கள் கலங்க மனம் உருகி பிரார்த்தனை செய்கின்றனர். குடும்ப பாரத்தை அன்னையின் காலடியில் அர்ப்பணித்து இல்லம் செல்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் பிரார்த்தனைகளின் பலன் தெரியத் தொடங்குகிறது.

பிரார்த்தனை செய்த மக்களின் துன்பங்களும், இடர்பாடுகளும் மெல்ல மெல்ல விலகுகின்றன. அவர்கள் வாழ்க்கையின் துயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்குகிறது. அவர்கள் மனதில் நிம்மதி பெருகிறது. மனம் மகிழும் அவர்கள் அன்னையை நோக்கி வருகின்றனர். இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சுற்றி உயர்ந்த திருமதில் சுவர்கள். ஆலயத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் என இரண்டு நுழைவு வாசல்கள். உள்ளே நுழைந்ததும் சிறப்பு மண்டபமும் நந்தி பகவானின் மண்டபமும் உள்ளன. அடுத்து உள்ள நுழைவு வாசலின் வலதுபுறம் சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார்.

மகா மண்டபத்தில் வலதுபுறம் அன்னை அதலாம்பிகை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தாமரையையும், மேல் இடது கரத்தில் சங்கையும் ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை வீற்றிருக்கிறாள். அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவன் நாராயனேஸ்வரர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கூத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top