Monday Nov 25, 2024

கீழப்பூதனூர் கைலாசநாதர் கோயில், நாகப்பட்டினம்

முகவரி

கீழப்பூதனூர் கைலாசநாதர் சிவன் கோயில், கீழப்பூதனூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609702

இறைவன்

இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி

அறிமுகம்

திருவாரூர் – நாகூர் சாலையில் உள்ள சோழங்கநல்லூரில் இருந்து வடக்கில் நான்கு கிமி தூரம் சென்றால் இவ்வூரை அடையலாம். திருச்செங்காட்டாங்குடியில் இருந்து தெற்கில் 2 கிமீ தூரத்தில் சென்றடையலாம். மேலபூதனூரின் கிழக்கில் ஒரு கிமீ தூரத்தில் கீழபூதனூர் உள்ளது. கிழக்கு நோக்கிய சிவன்கோயில் முற்றிலும் புதிதாய் உருவாகி உள்ளது. அருகில் கருவறை போன்ற ஒன்று கட்டி முடிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. பெரிய குளத்தின் தென்புறம் உள்ளது. இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், இறைவி காமாட்சி தெற்கு நோக்கியும் உள்ளனர். மண்டபத்தின் வெளியில் நந்தி தனி மேடையில் உள்ளது. கருவறை கோட்டங்களில் விநாயகர் தென்முகன் லிங்கோத்பவர் துர்க்கை உள்ளனர். வடகிழக்கில் பைரவர் சூரியன் தனி மடத்தில் உள்ளனர். விநாயகர் முருகன் இருவருக்கும் தனி சிற்றாலயங்கள் உள்ளன.

புராண முக்கியத்துவம்

க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாட்டு பூதனூர் என கல்வெட்டுக்கள் சொல்லும் பூதனூர் சோழர்காலத்தில் நிலக்கொடையாக கொடுக்கப்பட்ட ஊராகும். திருவாரூர் அருகில் பூதமங்கலத்தான் என்னும் வறியவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மகன் கருணாகரன். பூதமங்கலத்தான் இறந்த பின் சிறுவன் கருணாகரன் செல்வனாவான் என்பதைத் தன் மந்திர சக்தியால் அறிந்த ஒருவன் வந்து கருணாகரனிடம் ஒரு லட்சம் பொன் கேட்டான். கருணாகரன் நகைத்து ஒரு காசுகூட இல்லாத என்னிடம் ஒரு லட்சம் பொன் கேட்கிறாயே என்றான். பின் கருணாகரனுக்காகச் செல்வத்தைக் காத்து நிற்கும் பூதத்தை பற்றி சொல்லி பின் பூதத்தை வேண்டி கடாரங்கொண்டானிலிருந்து பொற்குவியல் பெற்றுக் கருணாகரன் செல்வன் ஆனான். பெரும் செல்வத்தை திருவாரூர்ச் சிவாலயத்திற்கு அளித்தான். இதை பற்றிய பாடல் ஒன்றும் உள்ளது. இந்த வறியவன் வாழ்ந்த ஊரே பூதனூர் எனப்படுகிறது. இவ்வூர் தற்போது மேலபூதனூர், கீழபூதனூர் என உள்ளது, இரு ஊர்களிலும் சிவாலயங்கள் உள்ளன. #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீழப்பூதனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top