கம்பர் நத்தம் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
கம்பர் நத்தம் சிவன்கோயில், கம்பர் நத்தம் (கம்பைய நத்தம்), பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613504
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தஞ்சை- அம்மாபேட்டை சாலையில் உள்ளது சாலிய மங்கலம், இங்கிருந்து தெற்கில் தொடர்வண்டி பாதையினை கடந்தால் சாலியர் கோட்டை தற்போது சூழியகோட்டை என உள்ளது. அதனை ஒட்டி இரு கிமீ தூரத்தில் கம்பர் நத்தம் கிராமம் உள்ளது. முன்பு கம்பைய நத்தம் எனப்பட்ட இவ்வூர் தற்போது கம்பர் நத்தம் எனப்படுகிறது. இங்குள்ள பெரிய திடல் வெளியில் பெரியதொரு கோயில் இருந்து படையெடுப்பில் சிதைக்கப்பட்டதால் இறைவனது சிலைகள் வெட்டவெளியில் இருந்தன ஊர் மக்கள் இதற்க்கு ஒரு கொட்டகை மட்டும் அமைத்துள்ளனர். சிறிய கோயில் ஒன்றினை எழுப்ப உதவி கோரி உள்ளனர். சில மாதங்களின் முன் அருகில் பள்ளி ஒன்று கட்ட கடைக்கால் தோண்டியபோது ஒருகோயிலுக்கு உரிய அனைத்து ஐம்பொன் சிலைகள் தொகுப்பு ஒன்று கிடைத்துள்ளது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கம்பர் நத்தம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி