கன்னியாகுடி கைலாசநாதர் சிவன் கோயில்
முகவரி
கன்னியாகுடி சிவன் கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 112.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: கல்யாணசுந்தரி
அறிமுகம்
வைத்தீஸ்வரன் கோயில் மேற்கில் உள்ள திருப்புன்கூருக்கு தெற்கில் ஒரு கிமி தூரத்தில் உள்ளது இந்த கன்னியாகுடி. சிறிய ஊர் இரண்டே தெருக்கள், ஒரு அரசு பள்ளி, ஒரு சிவன் கோயில் ஒரு விநாயகர் கோயில் சுற்றிலும் சில்லென்ற வயற்காடு. இங்கு கிழக்கு நோக்கிய சிவன் கோயிலாக உள்ளது கைலாசநாதர் கோயில். சிறிய கோயில் தான், இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி கல்யாணசுந்தரி தெற்கு நோக்கி உள்ளார்கள். இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமாக உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் முருகன் மகாலட்சுமி உள்ளனர். நவகிரகம் பைரவர் சூரிய சந்திரர்கள் சனிபகவான் உள்ளனர். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்புன்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வைத்தீஸ்வரன் கோயில்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி