கஞ்சங்கொல்லை தர்மேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி
கஞ்சங்கொல்லை தர்மேஸ்வரர் சிவன்கோயில், கஞ்சங்கொல்லை, காட்டுமன்னார் கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 612 901
இறைவன்
இறைவன்: தர்மேஸ்வரர் இறைவி : தர்மேஸ்வரி
அறிமுகம்
இங்கு முன்னர் பெரிய சிவலிங்கத்துடன் கூடிய சிவன் கோயில் இருந்ததுள்ளது. காலம் கோயிலை மட்டும் விழுங்கிவிட, கோயிலின்றி பல காலம் இருந்த லிங்கத்தை மட்டும் எடுத்து அதற்க்கு சிறிய கோயில் ஒன்று எழுப்பி உள்ளனர் ஊர் மக்கள். ஆனால் அம்பிகையாக அக்னி மகுடம் கொண்ட மாரியை தெற்கு நோக்கி வைத்துள்ளனர். இறைவன் தர்மேஸ்வரர் என்றும் இறைவி தர்மேஸ்வரி என்றும் அழைக்கிறார்கள். கிழக்கு நோக்கிய சிறிய ஒற்றை கருவறை கொண்ட கோயில் கருவறை வாயிலில் விநாயகர் முருகன் உள்ளனர். கருவறை தெற்கில் தக்ஷணமூர்த்தி உள்ளார். கருவறை பின்புறம், சனிபவானுக்கு மேற்கு நோக்கிய சன்னதி உள்ளது வடக்கில் துர்க்கை சன்னதி உள்ளது. நவகிரகம் பைரவர் என அனைத்தும் உள்ளது. அணைக்கரையில் இருந்து ஐந்து கிமி தூரத்தில் வடவாற்றின் தென் கரையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தின் தென் கடைகோடி கிராமம் இது.
புராண முக்கியத்துவம்
அணைக்கரை எனப்படும், கீழணையில் இருந்து பிரிந்து வரும் கொள்ளிடம் ஆறு வடவாறு இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதிதான் கஞ்சன்கொல்லை. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் கபிலர். குறிஞ்சிப் பாட்டின் தலைவி, தனது தோழியுடன் நீராடி மகிழ்கிறாள். பலபூக்களைப் பறித்துப் பாறையில் குவிக்கிறாள். அதில் 99 மலர்கள் இடம்பெறுகின்றன. இம்மலர்கள் பற்றி 34 அடிகளில் தொடர்ச்சியாக வர்ணிக்கப்படுகின்றன. அதில் அவர் குல்லை எனும் கஞ்சங்குல்லை மலர் பற்றி கூறுகிறார். குல்லை என்பது துளசி இனத்தைச் சேர்ந்தது. அதனால் அந்த மலரின் பெயரே இவ்வூரின் பெயராகி இருக்கலாம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கஞ்சங்கொல்லை
அருகிலுள்ள இரயில் நிலையம்
காட்டுமன்னார் கோயில்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி