கங்காதரபுரம் கங்காதரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
கங்காதரபுரம் கங்காதரர் சிவன்கோயில், கங்காதரபுரம், அளவந்திபுரம், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612 302..
இறைவன்
இறைவன்: கங்காதரர்
அறிமுகம்
திருவையாறு- கும்பகோணம் சாலையில் சுவாமிமலை அடுத்து இரண்டு கிமி தூரத்தில் உள்ளது கங்காதரபுரம். அழகிய காவிரிக்கரைகிராமம், வடகரையில் கங்கை வழிபட்ட கோயில் கொண்டவர்தான் இத்தல இறைவன். பிரதான சாலையில் ஒரு அய்யனார் கோயில் உள்ளது. அதன் எதிரில் செல்லும் தெருவில் உள்ளது விநாயகர் கோயில். ஆம் விநாயகருக்கான கோயிலில் சிவனும் குடி கொண்டுள்ளார். இக்கோயில் கிழக்கு நோக்கியது. தற்போது சிவன்கோயில் அங்கில்லை, காலவெள்ளம் அல்லது காவிரி வெள்ளம் கோயிலை சிதைத்துவிட தற்போது பெரிய லிங்கபாணன் மட்டும் விநாயகர் கோயிலில், விநாயகருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பெரிய லிங்க பாணன் ஆவுடையார் உடைந்து வெளியில் கிடக்கிறது. இறைவன் எதிரில் ஒரு நந்தியும் பலி பீடமும் வெளியில் வைக்கப்பட்டுள்ளன. அய்யனார் கோயிலில் தென்முகன், ஜேஷ்டா தேவி மற்றும், சண்டேசர் போன்ற சிலைகள் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.. மற்ற தெய்வங்கள் எங்குள்ளன என தெரியவில்லை. இறைவன் பெயரே ஊர் பெயராக இருத்தல் கூடும் என்பதால் இறைவன் கங்காதரர் என்றே கொள்வோம்.
புராண முக்கியத்துவம்
ஒரு சமயம் இறைவனுக்கு பிரணவ மந்திரத்தின் உட்பொருளை தனது குழந்தையுமான ஸ்ரீ முருகப்பெருமான் சொல்லகேட்க ஆசைப்பட்டு திருக்கயிலையில் இருந்து தென் திருக்கயிலாயம் என அழைக்கப்படும் திருவையாறு திருத்தலத்திற்குத் தன் தேவி பார்வதியுடன் எழுந்தருளினார். பெருமானுடன் அம்பிகை பார்வதியும், நந்தியும், கணபதியும், நவகிரகங்கள் தன் துணைவியாருடனும், இந்திராதி தேவர்களும் திருவையாற்றில் வந்திறங்கினர். யாராக இருந்தாலும் தனியே குருகுலம் செல்வது என்பது நியதி. இது பரமேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும். எனவே அங்கிருந்து சுவாமிமலைக்கு எழுந்தருளிய எம்பெருமான் தான் மட்டும் சீடனாக ஸ்ரீ முருகப்பெருமானிடம் பிரணவத்தின் உட்பொருளை கேட்கவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, தன்னுடன் வந்த அனைவரையும் விடுத்து செல்ல எண்ணி வரும் வழியெங்கும் ஒவ்வொரு கலைகளை விடுக்கிறார், திங்களூர், உமையாள்புரம் கணபதி அக்ரஹாரம், ஈஸ்வரன்குடி, வைரவன் கோயில், சோமேஸ்வரபுரம், என பரிவாரங்கள் தங்கிவிட, கங்காதரபுரத்தில் தன் தலையில் இருந்த கங்கையை இறக்கி விட்டார். அது கங்கைபுறம் ஆகி கங்காதரபுரம் ஆகியது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கங்காதரபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி