கங்கனூர் சொக்கநாதர் சிவன் கோயில்
முகவரி
கங்கனூர் சிவன்கோயில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம்
இறைவன்
இறைவன்: சொக்கநாதர்
அறிமுகம்
கங்கைகொண்ட சோழபுரத்தின் கிழக்கில் உள்ள கொல்லாபுரம் ஊரின் அருகில் உள்ளது கங்கனூர். கங்கை விடங்கன் நல்லூர் என்பது கங்கவடங்க நல்லூர் ஆகி அதுவும் சுருங்கி கங்கனூர் ஆனது. முதலாம் இராஜேந்திர சோழரின் கங்கை வெற்றிக்குப் பின்னரே சோழகங்கன் என்னும் சொல் பழக்கத்தில் வந்திருக்க வேண்டும். ஆதலால் சோழனின் பட்ட பெயர் கொண்டே இவ்வூர் இருக்கிறது என.அறியலாம். இங்கு உள்ள வெள்ளாளர் தெருவில் கிழக்கு நோக்கிய சிவாலயம் உள்ளது. முன்னர் பெரிய அளவில் இருந்த கோயில் தற்போது சிறிய அளவிலான கோயில் உருமாறியுள்ளது. இறைவன் சொக்கநாதர் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கி யும் உள்ளனர். கருவறை வாயிலில் பெரிய விநாயகரும் நந்தியும் உள்ளனர். தென்புறம் சித்தி விநாயகர் மற்றும் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க சுப்ரமணியர் உள்ளது சிறப்பு. அருகில் தனித்த ஒரு லிங்கம் உள்ளது. வடபுறத்தில் பெரிய சண்டேசர் உள்ளார். வேறு சுவாமி சிலைகள் ஏதும் இல்லை. வெளியில் ஓர் சண்டேசரை ஒத்த சிலை ஒன்றும் வீதியின் கிழக்கில் ஓர் சூரியனின் சிலையும் உள்ளது. பெரிய அளவில் ஏதும் பூசைகள் இல்லாவிட்டாலும் தினசரி தெருவாசிகளால் பூஜிக்கப்படுவது மகிழ்ச்சி. தெருவின் கடைசியில் உள்ள நாகாத்தம்மன் எனும் புற்று வடிவிலான அம்மன் பெருவாரியான மக்களை ஈர்க்கிறார். அமாவாசை பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் இவருடன் சொக்கநாதரும் வாழ்கிறார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
`
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொல்லாபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி