இருளக்குறிச்சி சிவன்கோயில், கடலூர்
முகவரி
இருளக்குறிச்சி சிவன்கோயில், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம்,
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
விருத்தாசலம் – பாலக்கொல்லை சாலையில் உள்ள ஆலடியை தாண்டியதும் கொட்டாரகுப்பம் பேருந்து நிறுத்தத்தின் கிழக்கில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இருளக்குறிச்சி கிராமம் உள்ளது, மொத்தமாக 18கிமி தூரம் இருக்கும். இருளர் இன மக்கள் வசித்த பகுதி என்பதால் இந்த பெயர். இங்கு ஊருக்குள் நுழையும் முன்பு ஒரு பெரிய குளத்தின் மேற்கு கரையில் உள்ளது நாம் காணவிருக்கும் சிவன்கோயில். கிழக்கு நோக்கியது, இறைவன் நடுத்தர அளவுடைய சிவலிங்கமாக உள்ளார். இறைவன் பெயர் அறிய இயலவில்லை. சிறிய அளவிலானகோயில் தான், வாயிலில் விநாயகரும், முருகரும் உள்ளனர். இறைவன் எதிரில் சிறிய நந்தி உள்ளார். கோயிலின் வடபுறம் தனித்த ஒரு மாடத்தில் ஒரு அம்பிகை சிலை உள்ளது அது இந்த சிவன் கோயிலுக்கு உரியதாக இல்லை. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இருளக்குறிச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாச்சலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி