Wednesday Jan 01, 2025

இரும்பாடி காசி விஸ்வநாதர் திருக்கோயில், சோழவந்தான், மதுரை

முகவரி

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், இரும்பாடி, சோழவந்தான். மதுரை மாவட்டம் – 625205.

இறைவன்

இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி

அறிமுகம்

சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் வடநாட்டில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு இணையாக தென்னகத்து காசி என்று பக்தர்களால் அழைக்கப்படக் கூடிய காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் கட்டிடங்கள் மற்றும் கோபுரங்கள் அனைத்தும் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டதாகவும், இந்த கோவிலில் வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

புராண முக்கியத்துவம்

பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆண்டு வந்த போது, தற்போது இரும்பாடி என்றழைக்கப் படும் இவ்வூரில் அவர்களின் படை பலத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் பணியினைச் செய்து வந்தனர். அப்போது, கவனக் குறைவு காரணமாக சில வீரர்கள் தம் உடல் உறுப்புக்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வீரர்கள் போரில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆயுதங்கள் தயாரிப்பின் போது வீரர்களின் உடல் உறுப்பு இழப்புகளைத் தவிர்க்கவும், அவர்கள் போர் புரியும் போதும் வேட்டையாடும் போதும் வெற்றி மட்டுமே கிட்டவேண்டும் என்பதற்காகவும் சிவனிடம் முறையிடுவதற்காக, இத்தலத்தில் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர்.

நம்பிக்கைகள்

வேண்டிய காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு பால், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், விவசாய தானியங்களும் படைக்கப்படுகிறது. நாகதோஷம் நீங்கிட பஞ்சநாகத்திற்கு பால் ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்து அர்ச்சனைகள் செய்யப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

முதிய வடிவில் அம்பாள்: தென் மாவட்ட கிராமங்களில் தண்டட்டி எனப்படும் பாம் படத்தை மூதாட்டிகள் காதில் அணிந்திருப்பர். மெழுகின் மேல் கனமான தங்கத்தகட்டால் மூடி இந்த ஆபரணம் செய்யப்படும். இதை அணிய காதை வளர்த்து பெரிய துவாரமாக போட வேண்டும். இந்த ஆபரணம் வெகு காலத்திற்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் சிவபெருமானின் மனைவியான பார்வதி முதிய கோலத்தில், பாம்படம் அணிந்து இக்கோயிலில் அருட்காட்சி தருகிறாள்.

திருவிழாக்கள்

பங்குனியில் மூன்று நாள் பிரம்மோற்சவம், மாசி மகம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் விழா கொண்டாடப்படு கிறது. அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கருப்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சோழவந்தான்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top