Monday Nov 25, 2024

ஆலிச்சிக்குடி நிருதீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி

ஆலிச்சிக்குடி நிருதீஸ்வரர் சிவன்கோயில், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606110.

இறைவன்

இறைவன்: நிருதீஸ்வரர்

அறிமுகம்

விருத்தாசலம் – கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர் கோயில் எதிரில் மேற்கு நோக்கிய சாலை ஒன்றுள்ளது அதில் இரண்டு கி.மீ. தூரம் சென்றால் ஆலிச்சிகுடி அடையலாம். முன்னர் கோயில் எப்படி இருந்ததோ தெரியவில்லை, தற்போது சிறிய ஒற்றை கருவறை கொண்ட கோயிலில் இறைவன் நிருதீஸ்வரர். கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். எதிரில் சிறிய நந்தி ஒன்றுள்ளது. கருவறை முன்பு அகன்ற தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. முகப்பு தகர கொட்டகையில் தனியாக ஒரு லிங்க மூர்த்தி பெரிதாக கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். இறைவன் பெயர் தெரியவில்லை இவரின் எதிரில் இரு நந்திகளுள்ளனர். அருகில் சிறிய விநாயகரும் உள்ளார். கருவறை சுற்றிவர சற்று இடம் உள்ளது அருகாமை வீட்டினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இட நெருக்கடியில் இறைவன் உள்ளார். முகப்பை பார்த்தால் சிவாலயம் போலவே தெரியவில்லை, பெரியதொரு ஆலயத்தின் மிச்சம் இது என்றே எண்ண தோன்றுகிறது.

புராண முக்கியத்துவம்

விருத்தாசலத்தின் தெற்கில் விருத்தாசலம் பழமலை நாதர் கோயிலை சுற்றிலும் எட்டு லிங்கங்கள் உள்ளன. அவை அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை ஆகும். கிழக்கில் பூதாமூரில் சுவர்ணகடேஸ்வரர் எனும் பெயரிலும் , தென்கிழக்கில் ஏகநாயகர் எனும் பெயரில் பூதாமூர் தெற்கிலும் , தெற்கு திசையில் பெண்ணாடம் சாலையில் எமலிங்கமும் , தென்மேற்கு திசையில் ஆலிச்சிகுடியிலும், மேற்குதிசையில் மணவாளநல்லூரிலும் , வடமேற்குதிசையில் நாம் காணவிருக்கும் வாயு லிங்கமும் , வடக்கு திக்கில் வயலூரிலும், வடகிழக்கு திக்கில் குப்பநத்தம் கிராமத்திலும் லிங்க மூர்த்திகள் உள்ளன. இதில் தென்மேற்கு திசையான ஆலிச்சிக்குடியில் சிறிய சிவாலயம் கொண்டிருக்கிறார் இறைவன் நிருதீஸ்வரர். ஆலின்கீழ்குடி என்பதே ஆலிச்சிகுடி என ஆனது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆலிச்சிக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருத்தாச்சலம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top