ஆலங்காடு ஆலங்காட்டீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
ஆலங்காடு ஆலங்காட்டீஸ்வரர் சிவன்கோயில்,
ஆலங்காடு, சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609115.
இறைவன்:
ஆலங்காட்டீஸ்வரர்
இறைவி:
பாலாம்பிகை
அறிமுகம்:
தமிழகத்தில் பல இடங்களில் ஆலங்காடு எனும் பெயர் கொண்ட தலங்கள் உள்ளன, ஊரின் மரங்களை வைத்து ஆகுபெயரானதால் ஆலங்காடு எனப்பட்டது. இறைவன் பெயர் ஆலங்காட்டீஸ்வரர் என்பதாக இருந்தது. ஆனால் இ.ச.அ.துறை படி இக்கோயில் இறைவன் அகஸ்தீஸ்வரர், பாலாம்பிகை என்றே உள்ளது. சீர்காழிக்கு வடகிழக்கில் 7கிமீ-ல் உள்ள பச்சைபெருமாள்நல்லூர் அருகில் தான் இந்த ஆலங்காடு உள்ளது. புத்தூர் – மாதானம் வந்து அதன் தெற்கில் மூணு கிமீ வந்தால் ஆலங்காடு தான். பெரியதொரு குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய திருக்கோயில் கொண்டுள்ளார் நம் ஈசன். இறைவி தெற்கு பார்த்த சன்னதி கொண்டுள்ளார்.
விநாயகர், முருகன், உபசன்னதிகளும் இருந்தன தற்போது இடிந்துபோன முகப்பு மண்டபத்தில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை பைரவர், சூரியன் சண்டேசர் நாகர் ஆகியோர் கிடத்தப்பட்டுள்ளனர். திருக்கோயிலின் முகப்பில் சிறு மாடம் போன்ற விநாகயர் சன்னதியும் முருகன் சன்னதியும் சாய்ந்து நிற்கின்றன. கோயிலின் பின்புறமும் ஒரு சிறு குட்டை உள்ளது. கோயில் பராமரிப்பின்றி பெரும்பகுதி பழுதடைந்துவிட்டது. எங்கும் மரம் செடி கொடிகள் என இந்த மழைக்கு முளைத்து நிற்கின்றன. ஒருகால பூஜைக்கு மட்டும் அர்ச்சகர் வருவதாக தெரிகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆலங்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி