ஆத்தூர் அகத்தீஸ்வரர் கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
ஆத்தூர் அகத்தீஸ்வரர் கோயில்,
ஆத்தூர், கீழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611105.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
திருவாருரின் கிழக்கில் உள்ள கீவளூரில் இருந்து தேவூர் செல்லும் பிரதான சாலையில் இலுப்பூர்சத்திரம் என ஒரு நிறுத்தம் உள்ளது, இங்கிருந்து மேற்கில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது ஆத்தூர். இந்த ஆத்தூரில் இருந்து இலுப்பூர் தாண்டி இரண்டு கிமீ தூரம் சென்றால் இதே ஆத்தூரின் மேல்பாதி உள்ளது, இங்கு சாலையோரத்தில் உள்ளது சிவன் கோயில். அதன் ஒரு பகுதியை அடைத்து அரசு பள்ளிகூடம் கட்டப்பட்டுள்ளது. ஒரு சிமென்ட் வளைவும் அதன் மேல் இறைவன் இறைவி சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலும் பழைய கோயிலின் புதிய வடிவம் தான்.
இறைவன் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கியுள்ளார். இறைவனின் இருபுறமும் சிறு மாதங்களில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் உள்ளனர். இறைவி சௌந்தரநாயகி தெற்கு நோக்கியுள்ளார். இரு கருவறையும் சேர்த்து நீண்ட மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில் நடுவில் நந்தி இறைவனை நோக்கியபடி உள்ளது. இந்த மண்டப முகப்பில் வீரராகவபெருமாள் சிலை ஒன்று கிழக்கு நோக்கி உள்ளது. பழம் கோயிலில் இருந்த சிலையாகலாம். கருவறை கோட்டங்களில் தென்முகன் மற்றும் துர்க்கை உள்ளனர். சண்டேசர் தனி மாடத்தில் உள்ளார். மண்டபத்தின் ஈசான்யத்தில் பைரவர் சனி, சூரியன் உள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி