ஆணையாங்குப்பம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், கடலூர்
முகவரி
ஆணையாங்குப்பம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608501
இறைவன்
இறைவன்: காசிவிஸ்வநாதர்
அறிமுகம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், ஆணையாங்குப்பம் சிவன்கோயில். சிதம்பரம் – கடலூர் சாலையில் உள்ள பு.முட்லூர் எனும் இடத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு பிரியும் சாலையில் ஒரு கிமி சென்றால் பெரிய அரசமரத்தடியில் உள்ளது இந்த ஆணையாங்குப்பம் சிவன்கோயில். சிறிய ஒற்றை கருவறை கொண்ட சிவன். காசிவிஸ்வநாதர் எனும் பெயர் தாங்கி உள்ளார். இதனை சாமியார் கோயில் எனவும் அழைக்கின்றனர். பெரிய திடல் போன்ற பரப்பில் அரசமரத்தடியின் கீழ் கிழக்கு நோக்கியபடி உள்ளது கோயில். சிறிய கோயிலாக இருந்தாலும் அமைதியான சூழல் நம் மனதை இலகுவாக்குகிறது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பரங்கிப்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
பரங்கிப்பேட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி