Sunday Dec 22, 2024

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் – திருவோணம் நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் போஸ்ட்,காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை தாலுக்கா, வேலூர் மாவட்டம். Phone: +91 4177 254 929, 94868 77896, 94861 39289

இறைவன்

இறைவன் – பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் இறைவி – அலர்மேல் மங்கை

அறிமுகம்

27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். உடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். உத்திராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர்.

புராண முக்கியத்துவம்

புண்டரீக மகரிஷி பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோயிலுக்கு பதிலாக சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர் வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான், என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான், என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,ரிஷியே ! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும், என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரசன்னமானதால் (தோன்றுதல்) இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார். இவளுடன், அலர்மேலு மங்கை தாயார் அருள் செய்கிறாள்.

நம்பிக்கைகள்

சிவனும் பெருமாளும் ஒன்றாக அருள்பாலிப்பதால் பிரதோஷம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் 107வது தலமான திருப்பாற்கடலை உடலுடன் சென்று பார்க்க முடியாது. இந்த குறை தீர்ப்பதற்காகவே பெருமாள் இந்த திருப்பாற்கடலில் அருள்கிறார். எனவே இங்குள்ள பெருமாளை தரிசித்தால் 107வது திவ்ய தேசமான திருப்பாற்கடல் பெருமாளை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், வக்கீல்கள், ஆடியோ சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு அடிக்கடி வந்து வழிபாடுசெய்து பலனடைகிறார்கள்

சிறப்பு அம்சங்கள்

சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. சிவனும் பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் 107வது தலமான திருப்பாற்கடலை உடலுடன் சென்று பார்க்க முடியாது. இந்த குறை தீர்ப்பதற்காகவே பெருமாள் இந்த திருப்பாற்கடலில் அருள்கிறார். பொதுவாக, பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். இது போன்ற அமைப்பை காண்பது அரிது.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, பிரதோஷம்

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காவேரிப்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காவேரிப்பாக்கம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top