Friday Nov 15, 2024

அருள்மிகு பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை திருக்கோயில்

முகவரி

அருள்மிகு பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் திருக்கோயில், இராமசாமி கோயில், பழையாறை, கும்பகோணம், தஞ்சாவூர் – 612 703

இறைவன்

இறைவன்: இராமலிங்கஸ்வாமி / இராமநாதசுவாமி / பஞ்சவன் மஹாதேவி ஈஸ்வரமகாதேவர்

அறிமுகம்

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் (பஞ்சவன்மாதேவீச்சரம்) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள பழையாறை கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளிப்படைக் கோயில் ஆகும். பட்டீஸ்வரத்திலிருந்து திருமேற்றளிக்குச் செல்லும் சாலையில் இப்பள்ளிப்படை அமைந்துள்ளது. இக்கோயிலை உள்ளூர் மக்கள் ராமசாமி கோயில் என அழைக்கின்றனர். அங்கே பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!. இந்த கோயில் மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளது. கருவறை மஹாமண்டபம், அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிவபெருமானின் சந்திரசேகர வடிவங்களின் அழகாக செதுக்கப்பட்ட இரண்டு உருவங்களை மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணலாம். கருவறை நுழைவாயிலில் துவாரபாலகர்களைக் காணலாம். கருவறைக்கு எதிரே அர்த்தமண்டபத்தில் ஒரு நந்தி உள்ளது. இறைவனை இராமலிங்கஸ்வாமி / இராமநாதசுவாமி / பஞ்சவன் மஹாதேவி ஈஸ்வரமகாதேவர் என்று அழைக்கப்படுகிறது, மேலும் கிழக்கு நோக்கி உள்ளது. அவர் லிங்கம் வடிவத்தில் கருவறையில் வைக்கப்பட்டுள்ளார். விநாயகர், கங்காதரா, அர்த்தநாரீஸ்வரர், தட்சிணமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கா ஆகியவை கருவறைச் சுவர்களைச் சுற்றி அமைந்துள்ள கோஷ்ட சிலைகள்.

புராண முக்கியத்துவம்

தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜ சோழனின் மனைவி தான் இந்த “பஞ்சவன் மாதேவி” , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற “ராஜேந்திர சோழன்”. உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம். தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நாம் குறை கூற வில்லை, அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா? வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, இராஜராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் “சோழன் மாளிகை”. கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள். பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம்.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்து அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பட்டீஸ்வரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பட்டீஸ்வரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top