Monday Nov 18, 2024

அருள்மிகு பகவதிஅம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி – 629702

இறைவன்

சக்தி: சர்வாணீ, பைரவர்: நிமிஷ், உடல் பகுதி அல்லது ஆபரணம்: முதுகுப் பகுதி

அறிமுகம்

இந்த கோவிலில் வீற்றிருக்கும் தேவியை குமரி அம்மன், கன்னியாகுமரி அம்மன், துர்க்கை அம்மன், பகவதி அம்மன் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். அம்மன் குடியிருக்கும் இந்த கன்னியாகுமரி கோவிலானது கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்கு பகுதியில் அரபிக்கடலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தென் கோடி முனையாகும். தேவியின் சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக இந்த இடம் கருதப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் முதுகுப் பகுதி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

நம்பிக்கைகள்

திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்த கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படும். காசிக்கு சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடு வதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கன்னியாகுமரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கன்னியாகுமரி

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top