அருள்மிகு நாராயணி சக்தி பீடக் கோவில், கன்னியாகுமாரி
முகவரி
அருள்மிகு நாராயணி சக்திப்பீடத் திருக்கோயில் முன்னுத்ரு, நாகாய் அம்மான், சுசிந்திரம், கன்னியாகுமாரி மாவட்டம் – 629704
இறைவன்
சக்தி: சநாராயணி பைரவர்: சன்ஹார், உடல் பகுதி அல்லது ஆபரணம்: மேல் பற்கள்
அறிமுகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பழமையான கோவில்களில் ஓன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில். இக்கோவில் தெற்கு ,வடக்காக அமைந்துள்ளது . தெற்கு வாசல்வழியாகச் சென்று வடக்கு நோக்கி முன்னுதித்த நங்கை அம்மனை தரிசிக்க வேண்டும். நாஞ்சில் நாட்டில் நங்கை என்னும் ஒட்டுப் பெயர் உள்ள பெண் தெய்வங்கள் அதிகம். அழகியபாண்டியபுரம் வீரவ நங்கை, தெரிசனங்கோப்பு ஸ்ரீதர நங்கை, பூதப்பாண்டி அழகிய சோழன் நங்கை ,குலசேகரபுரம் குலசேகர நங்கை என பல நங்கைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழிபாடு பெறுகின்றன. முன்னுதித்த நங்கை அம்மன் பற்றிய கதை சுசீந்தரம் கோயில் தலபுராணம் உடன் இணைந்தது. இந்த நங்கை கார்த்தியாயினி என்றும் இவள் இந்திரனால் பூஜிக்கப்பட்டவள் என்றும் நம்பிக்கை. இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் மேல் பற்கள் விழுந்த இடமாக கருதப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
இலட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூவரும் தங்களது புருஷன்மார்கள் மீண்டும் பழைய வடிவம் பெற கார்த்தியாயினி நோன்பு இருந்த போது காட்சி கொடுத்த தாய் தெய்வம் முன்னுதித்த நங்கை அம்மன். கௌதமரின் சாபம் நீங்க இந்திரன் வேள்வி செய்த போது ஜோதி ரூபியாக முன் உதித்தவள் இவள். இந்திரன் 300 கன்னியர்களை சாட்சியாக வைத்து பூஜித்த போது தோன்றியவள் முன்னுதித்த நங்கை அம்மன் என்னும் கதைகளும் வழக்கில் உள்ளது. அன்னையின் பெயர் பகவதி அல்லது அறம் வளர்த்த நாயகி அல்லது முன்னுதித்த நங்கை அல்லது நாராயணி அல்லது சுச்சி என்பதாகும். அதிகாலை பூஜைக்குப் பின் அம்பாள் அலங்கார நாயகியாகக் காட்சியளிக்கிறாள். சம்ஹார பைரவர் சுசீந்திரத்திற்கு அருகில் ஸ்தணு சிவா என்ற பெயரில் அருள்கிறார். வடக்கு பார்த்து நின்ற கோலத்தில் எட்டு கைகளுடன் மகிஷாசுரனை அழித்த வடிவமாக காட்சித் தருகிறாள். அதனால் அம்மன் மகிஷாசுரமர்த்தினி எனவும் அழைக்கப்படுகிறாள். 4 கைகளில் பாசம், உடுக்கு சூலம், கபாலம் இருக்கின்றன. சுசீந்தரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னுதித்த நங்கை அம்மனை தரிசித்து விட்டுதான் தாணுமாலயனை தரிசிக்க செல்கின்றனர். இக்கோவில் சுசீந்திரம் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் காற்சிலம்புகள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் விழாவில் தொடக்கத்திலும் ,முடிவிலும் சிறப்பு வழிபாடுகளை முன்னுதித்த நங்கை அம்மன் பெறுகிறாள். தாணுமாலயன் கோவில் விழாவின் முதல்நாள் ஆங்கார பலி சடங்கும். தேர் திருவிழாவின் முதல்நாள் இரவு ஜெபம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் நடக்கும். 10 -ம் நாள் விழாவில் வட்டப் பள்ளி ஸ்தானிகர் இக்கோவிலில் மௌன பலி நடத்துவார். நவராத்திரி முடிந்த அடுத்த நாள் விஜயதசமியில் இக்கோவில் உற்சவ விக்கிரகம் திருவனந்தபுரத்திற்கு பரிவேட்டை எழுந்தருளி செல்லும்.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கன்னியாகுமாரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கன்னியாகுமாரி
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்