அருள்மிகு தளிக்குளநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
அருள்மிகு தளிக்குளநாதர் சிவன்கோயில், பாலகணபதி நகர், தஞ்சாவூர் மாவட்டம் – 613 007
இறைவன்
இறைவன்: தளிக்குளநாதர்
அறிமுகம்
தளிக்குளநாதர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தாலுகாவில் உள்ள தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். மூலவரை தளிக்குளநாதர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் தீவில் அமைந்துள்ளது, தஞ்சாவூர் நகரில் சிவகங்கைப் பூங்காவின் உள்ள குளத்தின் நடுவில் இக்கோயில் உள்ளது. குளக்கரையிலிருந்து லிங்கத்திருமேனியைப் பார்க்கலாம். லிங்கத் திருமேனிக்கு எதிரில் நந்தி, பலி பீடம் ஆகியவை உள்ளன. படகுத்துறையிலிருந்து இழுவை ரயிலில் சென்றால் குளத்தின் நடுவில் உள்ள கோயிலை அடையலாம். சிவகங்கை பூங்கா குளத்தின் நடுவில் உள்ள சிவலிங்கசுவாமி கோயிலில் 10 நவம்பர் 2019 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த ஆலயத்தைப் பற்றி தேவாரம் பாடல்களில் அப்பர் குறிப்பிடப்பட்டுள்ளதால் இத்தலம் வைப்புத் தலமாக கருதப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி