அருள்மிகு சோளீசுவரர் திருக்கோயில், தோழூர் (தோளூர்)
முகவரி
அருள்மிகு சோளீசுவரர் திருக்கோவில், தோளூர் அஞ்சல், பாலப்பட்டி (வழி), நாமக்கல் – 637017
இறைவன்
இறைவன்: சோளீசுவரர், இறைவி: விசாலாட்சி
அறிமுகம்
நாமக்கல்-மோகனூர் சாலையில், அணியாபுரம் ரோடு என்னுமிடத்தில் மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் 3 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது. நாமக்கல்லிலிருந்து மோகனூர் செல்லும் நகரப் பேருந்துகள் அணியாபுரம் தோளூர் வழியாகச் செல்கின்றன. (நாமக்கல்லிலிருந்து 15 கீ.மீ.). தனிப்பேருந்தில் யாத்திரையாக வருவோர் நாமக்கல்லில் இருந்து மோகனூர் ச்சாலையில் நேரே வந்து – கால் நடை மருத்துவக் கல்லூரி, பால் குளிரூட்டும் நிலையம் இவற்றைத் தாண்டி – அணியாபுரம் மேல்நிலைப் பள்ளியை அடுத்து வலப் புறமாகப் பிரியும் அணியாபுரம் சாலையில் சென்று – அணியாபுரம் ஊரைத்தாண்டி – சிறிது தூரம் சென்றால் தோளூரை அடையலாம். தோளூர் பேருந்து நிறுத்தத்தின் எதிரிலேயே – சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. சிறிய கோயில் – ஊரும் சிறியது. எவ்விதவசதியுமில்லை. பழைமையான சிவாலயம். கருங்கல் கட்டடம். சுற்று மதிலாகக் கருங்கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. கோயில் சிதிலமாகியுள்ளது. போதிய பராமரிப்பு இல்லை. ஸ்வாமி அம்பாள் விமானங்களை தவிர எதுவும் இல்லை. ஆனால் அவற்றிலும் செடிகள் முளைத்துள்ளன. நாடொறும் ஒரு கால வழிபாடு மட்டுமே நடைபெறுகிறது. வேறு விசேஷங்கள் எதுவுமில்லை. சிவாலயத்திற்குப் பக்கத்திலுள்ள அம்மன் கோயில் நன்குள்ளது. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள கொங்கு நாட்டு வைப்புத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
முற்கால சோழ மன்னர்களில் ஒருவரான கரிகாலச் சோழனால் கி.பி. 700-ம் ஆண்டில் இவ்வாலயம் கட்டப்பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவராலும் திருப்பணி செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இக்கோயிலில் உள்ள இறைவன் சோளீசுவரர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். விநாயகர், நாகம் ஆகியோர் உள்ளனர். இறைவன், இறைவி விமானங்களைத் தவிர வேறெதுவும் இல்லை.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தோழூர் (தோளூர்)
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி