அருள்மிகு செங்கல்வராய) சுவாமி திருக்கோயில், கழுநீர்க்குன்றம் (திருத்தணி)
முகவரி
அருள்மிகு செங்கல்வராய சுவாமி சந்நிதி, அருள்மிகு செங்கழுநீர் விநாயகர் கோயில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி – 631 209. காஞ்சிபுரம் மாவட்டம்
இறைவன்
இறைவன்: செங்கல்வராயன் சுவாமி
அறிமுகம்
திருத்தணி மலை மீது சென்று, கோயிலை வெளிச்சுற்றில் மலையில் வலம் வரும் போது, கோயிலின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படிகளின் வழியே இறங்கியதும் இடப்பால் குளம் ஒன்று உள்ளது. அதன் வழியே சென்றால் சிவாச்சாரியார்களின் குடியிருப்புகள் உள்ளன. இப்படிகள் வழியே இறங்கியதும் இடப்பால் குளம் ஒன்று உள்ளது. அதைனையொட்டி ஸ்ரீ சரஸ்வதீசர் கோயில் உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். வலப்பால் ஒரு சிறிய மண்டபமும் அதனுள் சந்நிதியும் உள்ளது. இச்சந்நிதியில் முதலில் சிவலிங்கமூர்த்தமும் அதனையடுத்து உள்ளே விநாயகரும் காட்சியளிக்கின்றனர். இதை மக்கள் செங்கழுநீர் விநாயகர் கோயில் என்றைழைக்கப்டுகிறனர். இக்கோயிலில் உள்ள சிவலிங்க மூர்த்தத்தைச் “செங்கழுநீர் வரை அரையன்” என்றும், இப்பெயர் பேச்சு வழக்கில் மாறி “செங்கல்வராயன்” என்றும் அழைக்கின்றனர். இச்சிறிய மண்டபக் கோயிலே (செங்கல்வராய சுவாமி எழுந்தருளியுள்ள சந்நிதியே) கழுநீர்க்குன்றம் என்னும் வைப்புத் தலமாகும். இக்கோயில் திருத்தணி மலையில் உள்ளது. முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன. சென்னையிலிருந்து இத்தலத்திற்கு இரயில் அதிகமாக உள்ளது.
புராண முக்கியத்துவம்
இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள தொண்டை நாட்டு வைப்பு தலமாகும். தொண்டை நாட்டின் கண்கள் எனப் போற்றப்படுபவை காஞ்சிபுரமும் திருத்தணியும். திருத்தணி இன்று முருகப் பெருமானின் தலமாகப் போற்றப்பட்டுப் பெருஞ் சிறப்புடன் விளங்குகிறது. இத்தலத்திற்கு ‘காவியங்கிரி’ என்றொரு பெயருமுண்டு. ‘காவி’ எனப்படும் குவளை மலர் பூத்து குலுங்குகின்ற மலை என்பது பொருளாகும். இது போன்றே திருத்தணி மலையே கழுநீர் – செங்கழுநீர் மலர் பூத்து விளங்கும் மலையாகப் போற்றப்படுகிறது. விநாயகர் பெயராலேயே செங்கழுநீர் விநாயகர் கோயில் என்றழைக்கப்படும். இச்சிறிய கோயிலில் சிவலிங்க மூர்த்தம் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எவ்வித பராமரிப்பும் இல்லை. ஸ்வாமிக்கு தீபங்ககூடப் போடப்படுவதாகத் தெரியவில்லை. சந்நிதி இருளடைந்து உள்ளது. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கு செய்யப்படும் ராஜ உபசாரங்களில் இம்மூர்த்ததை யாரும் எண்ணிப் பார்ப்பததாகவோ, பார்த்ததாகவோ கூடத் தெரியவில்லை. எதிரிலுள்ள குளமும் நல்ல நிலையில் இல்லை. திருத்தணி மலையை கழுநீர்க்குன்று’ ஆகும். இம்மலையில் பிறரால் எளிதில் அறிய முடியாதவாறு விளங்குகின்ற சிவலிங்க மூர்த்தமொன்றே வைப்புத்தல சந்நிதியாகச் சொல்லப்படுகிறது.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருத்தணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருத்தணி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை