அருள்மிகு சரஸவதீஸ்வரர் திருக்கோயில், திருத்தனி
முகவரி
அருள்மிகு சரஸவதீஸ்வரர் திருக்கோயில், திருத்தனி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பின்னால், திருத்தனி – 631 209 திருவள்ளுர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: சரஸவதீஸ்வரர்
அறிமுகம்
திருத்தணி மலை மீது சென்று, கோயிலை வெளிச்சுற்றில் மலையில் வலம் வரும் போது, கோயிலின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படிகளின் வழியே இறங்கியதும் இடப்பால் குளம் ஒன்று உள்ளது. அதன் வழியே சென்றால் சிவாச்சாரியார்களின் குடியிருப்புகள் உள்ளன. இப்படிகள் வழியே இறங்கியதும் இடப்பால் குளம் ஒன்று உள்ளது. அதைனையொட்டி ஸ்ரீ சரஸவதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஒருக்கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். அங்குள்ள குருக்களில் சிலர் இச்சிவலிங்கத்தை குலத்தெய்வமாக வணங்குகிறார்கள். மூலவராக சரஸவதீஸ்வரர் காணப்படுகிறார். விநாயகர், முருகர், விஷ்னு ஆகிய மூர்த்தங்கள் காணப்படுகிறது, போதிய பராமரிப்பு இல்லை. சுற்றி குருக்களின் வீடுகளே உள்ளன.
திருவிழாக்கள்
பிரதோஷம்
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருத்தனி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருத்தனி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை