அருள்மிகு சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில்
முகவரி
அருள்மிகு சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில், திருச்சென்னம்பூண்டி (கோயிலடி அருகில்) தஞ்சாவூர் மாவட்டம் – 613 105
இறைவன்
இறைவன்: திருச்சடைமுடி மகாதேவர் இறைவி: சித்தாம்பிகா
அறிமுகம்
திருச்சென்னம்பூண்டி எனும் இத்தலம் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளியிலிருந்து கோவிலடி வழியாக கல்லணை செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவாலயம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. முழுவதும் கருங்கற்கலால் கட்டப்பட்ட அற்புதமான ஆலயம் இது. தற்போது தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முற்காலச் சோழர் கலைப் பாணியில் கி.பி. 9-10ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இறைவன் சித்தேஸ்வரர்; இறைவி சித்தேஸ்வரி. திருக்கடைமுடி மகாதேவர், திருச்சடைமுடி மகாதேவர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார். சிவாலயம் முற்றிலும் சிதிலமடைந்து போனதால் ஈசனை, அம்பாளின் சந்நதியில் வைத்துள்ளனர். இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
பசுமையான வயல்கள் சூழ்ந்த மிக அமைதியான இடத்தில் கோயில் அமைந்துள்ளது. இறைவன் சடைமுடியோடு காணப்படுவதால் திருச்சடையப்பர் என்றும் அழைக்கின்றனர். இறைவிக்கு நான்கு கரங்கள். மேலிரு கரங்கள் பத்ம ஹஸ்தங்களாகவும், கீழிரு கரங்கள் அபய, வரத ஹஸ்தங்களாகவும் திகழ்கின்றன. இக்கோயிலில் ராமாயண காலச் சிற்பங்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தட்சிணாமூர்த்தியும், பிரம்மாவும் கோஷ்ட மூர்த்திகளாக அருள்பாலிக்கின்றனர். ‘தொள்ளாற்றெறிந்த நந்திவர்மன் மாதேவி அடிகள் கண்ட மாறன் பாவை’ என்பவள் மாசிமகத்தில் ஏழு நாட்கள் திருவிழா நடைபெற பொன்னும், பொருளும் அளித்துள்ளதாகவும், பழுவேட்டரையர் மகள் ‘பராந்தகன் தேவி அருள்மொழி நங்கை’ என்பவள் பரிசுகள் பல அளித்துள்ள தகவலும் இங்குள்ள கல்வெட்டில் காணப்ப டுகின்றன. இவ்வளவு சிறப்பு பெற்ற இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய பக்தர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள்.
காலம்
9 – 10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சென்னம்பூண்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி