அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், குருக்கத்தஞ்சேரி
முகவரி
அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், குருக்கத்தஞ்சேரி கடலூர் மாவட்டம், திட்டகுடிவட்டம்,
இறைவன்
இறைவன்- கைலாசநாதர்
அறிமுகம்
விருத்தாசலம் அருகில் உள்ள ராஜெந்திரபட்டினம் ஊரில் இருந்து மூன்று கிமி தூரத்தில் உள்ளது இந்த குருக்கத்தஞ்சேரி இவூரை ஒட்டியே கிளிமங்கலம் எனும் ஊரும் உள்ளது. கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ! யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் ! இந்த பாடலில் வரும் குருகுகள் எனும் கொக்குகள் வழிபட்ட தலமாக இருத்தல் கூடும். குருகு குத்தன் சேரி என இருந்திருக்கலாம். சிறிய கோயில் இறைவன் இறைவி இருவருக்கும் தனி ஆலயங்கள் உள்ளன. இறைவனின் இடப்புறம் உள்ளது இறைவியின் கோயில். தென்மேற்கில் சிறிய விநாயகர் சன்னதி பின்புறம் முருகன் உள்ளார், நவகிரகம் ஆகியனவும் உள்ளன. கிளிமங்கலத்தின் அருகிலேயே இருப்பதால் அந்த குருக்களே இங்கும் வந்து செல்வார் என நினைக்கிறேன். பிற நேரங்களில் ரத்தினாம்பாள் எனும் பெண்மணியே பார்த்துக்கொள்கிறார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குருக்கத்தஞ்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி