அருள்மிகு ஆத்மநாதஸ்வாமி திருக்கோயில், தலைக்காடு
முகவரி
அருள்மிகு ஆத்மநாதஸ்வாமி திருக்கோயில், தலைக்காடு, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் – 614711
இறைவன்
இறைவன்: ஆத்மநாதஸ்வாமி இறைவி: சிவகாமசுந்தரி
அறிமுகம்
மேற்கு பார்த்து ஈஸ்வர் மிகவும் விசேஷமான அமைப்பு கொண்ட கோயில். ஏழு நிலையை கொண்ட கம்பீரமான ராஜகோபுரம் லிங்க ஸ்வரூபமாக மிக தொலைவில் உள்ள மக்களுக்கும் அருள்பாளிக்கும் விதமாக தரிசனம் தருகிறார். பரமேஸ்வரன் ஆனா ஆத்மநாதன் மேற்கு நோக்கி நான்கரை அடி உயரத்தில் முழுநீறு பூசிய வேதியன் ஆக காட்சியளிக்கிறார். பக்கத்திலேயே அம்பிகை சிவகாமி அம்மன் சன்னதி சர்வமத சகல ஜீவன்களுக்கும் தரிசனம் தருகிறாள். ஆத்மார்த்தமாக வணங்கி நிறைவுடன் பக்தர்கள் நமஸ்கரித்து தியானத்தின் ஆனந்த பரவசம் கொள்கிறார்கள் இவையெல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பு இப்போது இல்லை.
புராண முக்கியத்துவம்
ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றில் இரண்டாம் பராந்தகன் என்று புகழப்படும் சுந்தர சோழரும் அவரது மனைவியுமான வானவன்மாதேவியும் சின்னங்களாக திருநீறு உருத்திராட்சம் தரித்து எங்கும் சிவனடியார் கூட்டம் சூழ்ந்திருக்க சிவ கோஷம் நிகழ்ந்திருக்க ஆண்டவன் சன்னதியில் ஆனந்தம் ததும்ப அமர்ந்திருக்கிறார்கள். மாணிக்கவாசகரின் திருவாசகம் எங்கும் எப்போதும் ஒலிக்க வேண்டுமென்ற பேராவல் வானவன் மாதேவிக்கு. அவரது வேண்டுகோளின்படி இதோ சிவனடியார்கள் நடந்துகொண்டிருக்கிறது திருவாசக முற்றோதல் திருவாசக தோன்றிய தளமான திருப்பெருந்துறையில் அருளும் ஈசனின் மீது மாணிக்கவாசகர் ஜோதி வடிவாக நின்ற சிதம்பரநாதர். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் தாய் தந்தையர் வானவன் மாதேவி சுந்தரசோழன். சிவபாதசேகரன் என்றும் போற்றப்படுகிறார், இவர்களின் மைந்தனே பரமசிவ பக்தன். குந்தவை பிராட்டி ஆதித்த கரிகாலன் என்றும் மேலும் இரு குழந்தைகள் இவர்களுக்கு. இவர்கள் காலத்தில் தேவாரப் பாடல்கள் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லை என்பதும் திருவாசக பாடல்களை சிவனடியார்கள் போற்றித் துதித்த தமிழ் வேதம் என்பதும் இதனால் தெரிகிறது. வானவன்மாதேவி 108 சிவாலயம் கட்டிய பெருமாட்டி. இராஜராஜன் காலத்தில்தான் கற்றளியாக காட்டப்பட்ட அன்னையர் காலம் வரை மனிதர்களால் கட்டப்பட்ட கோயில்கள் ஆகும். திருவாசகம் உற்றதோர் நிகழ்வு முடிந்து மகேஸ்வர பூஜை எனப்படும் சிவனடியார்கள் அனைவரும் பந்தி போஜனம் செய்து வைத்தான். அங்கு சிவனடியார் வேடத்தில் கூட்டத்தில் ஒருவராய் திருவிளையாடல் புரிந்தார் முனிவர் வேடத்தில் வந்திருந்த பரமசிவன். அவன் இவர்களுக்கு அருள்வாக்கு கூறினார். “பார் போற்றும் மகன் பிறப்பான், பல சிவாலயங்களை கட்டுவான். 108 சிவாலயங்களை நிர்மானிப்பிர்கள்” என்று அந்த சிவரூபம் முனிவர் கூறினார். இந்நிகழ்வை ஒருநாள் சுந்தர சோழன் வானவன் மாதேவியும் நடந்த அனுபவத்தை நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து சிவ சிந்தனையுடன் கண்ணயர்ந்த நேரத்தில் கனவில் உமாபதி இடப வாகனத்தில் வானவன் மாதேவியார் கனவில் தோன்றி, ஈசன் ’தூதுவன் தலைகாட்ட செய்து கொண்டு வருவதற்கு முன்பே, தூதாய் விவரம் கூறினாள்! உனது ஆராதனையில் யாம் மகிழ்ந்தோம். தலைக்காடில் வெளிப்பட்டோம். உமது முற்றோதல் மூலமாக வெளிப்படும் விழாவிலும் அடியரோடு அடியாராய் பங்கு கொண்டோம்…. தனக்கு ஒரு ஆலயம் அமைப்பிர்களாக. பெரும் பக்தி கொண்டு திருப்பெருந்துரை ஈசனான ஆத்மநாதசுவாமி என்று பெயர் எனக்கு அமையட்டும் சிதம்பரத்தில் என் தாண்டவ கோலத்தில் அருள் இருக்கும் அம்மை சிவகாமசுந்தரி என்னும் நாமத்தில் அம்பாள் வழங்கப்படும். இவ்வாலயம் தரிசித்தால் திருப்பரங்குன்றம் சிதம்பரமும் தரிசித்த பலன் கிட்டும். திருவாசக முற்றோதல் அருளும் கிட்டும். ஆலயம் கட்டுவதற்காக காத்திருந்த நான், உன் பரம பக்திக்கு இறங்கி கொன்றை மர வனத்தில் வெளிப்பட்டு இருக்கிறேன். கனவு கண்டு எழுந்தாள். சிறிது நேரத்தில் தூதுவன் வந்தும் அதே செய்தியை சொன்னான். உடனே தலைக்கோட்டை அடைந்தன மன்னரும் வானவன் மாதேவியும். கொன்றை மரம் சூழ்ந்த இடத்தில் புதிதாக பூமியில் இருந்து வெளிவந்த சிவலிங்கத் திருமேனியாக ஈசனார். அருகில் சென்று கண்டால் இறைவி. ஆனால் அவள் மூச்சு இறைத்து விழுந்தாள். பதறிப்போன மன்னன் ஓடோடி வந்தேன். அவளை கவனிக்க செய்துவிட்டு மன்னர் சிவலிங்கத்தை காண்கின்ற பொழுது அவனும் திடுக்கிட்டான். ஏன் என்றால் சிவனின் மேலே உளியால் உடைக்கப்பட்டது போல பெரிய தெறிப்பு. மூன்றாக தெறித்து விழுந்தது போல தலைமகனின் கோடுகளைக் கொண்டு மன்னன் இந்த விபரீதம் எவ்வாறு நடந்தது என்று தெரியாமல் அதற்காக தண்டனை அளிக்க முற்பட்டாளன். பதறினான் கதறினான் தவறாய் ஈசன் திருமேனியை தகர்த்த வரை தண்டிக்கவும் துணிந்தான். அதற்கு முன் ஏன் இந்த விபரீதம் என வினவினார். அதற்கான விடையை மூர்ச்சையில் எழுந்த வானவன்மாதேவியிடம் முக்கண்ணன் கூறினார். எல்லாம் என் திருவிளையாடலே! இது சுயம்புவாய் தோன்றிய கோடுகள். வெளியில் இருந்து தோன்றிய காயம் அல்ல. முட்டை வெளிகளிலிருந்து உடைந்து வீணாகும் உள்ளிருந்து உடைந்தால் உயிர் ஜனிக்கும். இந்த சிவலிங்க திருமேனி உள்ளிருந்து விரிந்து எழுந்து நிற்பதால், அருள் சாந்நித்யம் பரப்பும். “எம் திருமேனியில் உள்ள மூன்று கோடுகளும் பிரம்மா, விஷ்ணு, சிவ ஸ்வரூபம் நானே என்பதை விளக்குகிறது. ஓங்காரத்தின் அகார, உகார, மகாரத்தை குறிக்கும், ரிக், யஜூர், சாம வேதங்களை குறிக்கும், சத்வ, ரஜோ, தமம் என்றும் முக்குணங்களையும், மூன்று உலகங்களையும், மூன்று காலங்களையும், முப்பெரும் தேவிகளின் மூன்று கூறுகளையும் குறிக்கும். இது பின்னமானது அல்லது எமது தத்துவத்தை விளக்கும் சின்னமானது. எனவே இத்திருமேனியை பிரதிஷ்டை செய்யக” என்று கூறி மறைந்தார். மருத்துவச்சி இன்னொரு சந்தோஷமான விஷயத்தையும் சொன்னார். அரசி சிவபக்த சோழ வம்சத்தை தன் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதுதான். ஆலய நிர்மான பணிகள் துவங்கப்பட்டு சுட்ட செங்கற்கள் மண்ணலான பிரம்மாண்டமாக எழும்பியது ஆலயம். ஈசனார் அருளியபடியே குழந்தை பிறந்தது. கும்பாபிஷேகம் நிகழ்ந்தது. வானவன் மாதேவியார் கட்டிய 108 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. அன்று சிவபக்திக்கு சாட்சியாக சிவனே தோன்றிய அருளியதன் சாட்சியாக விளங்கிய இந்த ஆலயத்தின் இன்றைய கதையை கண்டால் பக்தர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரும். இடப வாகனனின் பக்தர்களின் இதயம் நொறுங்கி அழகும். பேறுகள் பலவும் அருளிடும் ஈசனின் புராதான ஆலயத்திற்கு சான்றாய் இன்று இருப்பது, இடிந்து விழும் நிலையில் உள்ள முகப்பு நந்தி மண்டபம் மட்டுமே. ஆன்றோரும் சான்றோரும் தரிசித்த, அரசர்களும் ஆன்மிகப் பெருமக்களும் தொண்டு செய்தும் கண்டு மகிழ்ந்த கோயில் முழுக்க இன்று மணல் திடலாக உள்ளது. பட்டினத்தார் சொல்வது போல் வெண்மணலே திருநீறாக காட்சியளிக்கிறது. தரைவீழ்ந்து ஈசன் தாள் பணிந்த கோயில் இன்று மொத்தமாக தரைமட்டமாக்கி போன ஆலயமாக உள்ளது. ஒரு ஓரமாக ஷெட் கட்டி அதில் எல்லா சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உற்சவ மூர்த்திகள் அருகில் உள்ள வேறு கோயிலில் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டுள்ளன. ஊரின் முதியவர் ஒருவர் கூறுகையில், நான் இளைஞனாக இருந்தபோது தான் ராஜகோபுரம் சிதிலமடைந்து இடிக்கப்பட்டது. பழமை மாறாகக் கட்டவேண்டும் என்ற சிவபக்தர் ஒருவர் கருங்கல் தூண்கள், கற்களை சேகரித்து வைத்தார். அந்த கருங்கற்கள் ஊர் முழுவதும் கிடைக்கிறது இன்றும். ஆனால் எக்காரணத்தாலோ கட்டுமானம் நடைபெறுவில்லை. மேலும் ஆலயம் வெளியில் 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கல்வெட்டை காட்டினார். அறநிலையத்துறை அமைச்சர் அதிகாரிகள் நட்ட கல்வெட்டு. கும்பாபிஷேக வேலைகள் துவங்குவதாக, ஆனால் அங்கு எந்தத் திருப்பணியும் தொடங்கப்படாமலெ போனது. ஏன் என்ற கேள்விக்கு யாருக்குமே விடை தெரியவில்லை! இதோ, அன்று தொழிலுக்கும் தானே காட்சி என்பதாக வனத்தின் நடுவே மூன்று கோடுகளுடன் முளைத்தெழுந்த இப்போது முக்காலமும் நானே என உணர்த்தும் விதமாக பக்தர்கள் மனதில் நுழைந்திருக்கிறார். அதன் விளைவாக ஈசனுக்கு மீண்டும் சிறு கோயில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. மண்ணுயிர்கள் மனத்துள் எல்லாம் இருந்தருளும் மகேசன், தனக்கு திருப்பணி செய்யும் எண்ணத்தைத் தான் நெசிக்கும் பக்தரான உங்களுக்கும் எற்படுத்தபடலாம். அப்படியானல் ஊர்க்கூடித் தேர் இழுப்போம் ஊஹூம்…. உள்ளங்கள் ஒன்றாய்க்கூடி திருக்கோயில் அமைப்போம்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தலைக்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருத்துறைப்பூண்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி