அம்மனூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
அம்மனூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
அம்மனூர், திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610201.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் பதினெட்டாவது கிமீ-ல் உள்ள கச்சனம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலதுபுறம் 2 ½ கிமீ சென்றால் அம்மனூர். இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் உள்ளது. பெரிய அழகிய சதுர வடிவ குளத்தின் வடகரையில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. தென்கரையில் குளத்து மேட்டு மாரியம்மன் கோயில் உள்ளது.
இறைவன் – அகத்தீஸ்வரர் இறைவி – அகிலாண்டேஸ்வரி
அகத்தியர் லிங்கத்துடன் அம்பிகையையும் சேர்த்து ஸ்தாபித்து பூஜை செய்ததால் இவ்வூர் அம்மனூர் எனப்படுகிறது. கோயில் சிறிய கோயில் தான், முகப்பில் கோபுரமில்லை. அழகிய ரிஷபகாட்சி சுதையுடன் இறைவன் காட்சி தருகிறார். இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும் அம்பிகை தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளனர். முகப்பில் ஒரு கான்கிரீட் கூரையாக ஒரு மண்டபம் உள்ளது. அதில் இறைவன் முன்னர் ஒரு சிறிய நந்தி உள்ளது. நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக உள்ளார், அம்பிகையும் சிறிய அளவில் உள்ளார். கருவறை வாயிலில் சிறிய விநாயகரும் சிறிய பால முருகனும் உள்ளனர். முகப்பு வாயிலின் உட்புறம் இருபுறங்களிலும் சிறிய மாடங்கள் அதில் பைரவர், சூரியன் ஒரு புறமும் மறுபுறம் சந்திரனும் உள்ளனர்.
கருவறை கோட்டத்தில் தெற்கில் தென்முகன் வடக்கில் துர்க்கை உள்ளனர். கருவறையின் நேர் பின்புறம் அழகிய பெருமாள் கையில் சங்கு சக்கரத்துடன் அர்த்த பத்மாசனத்தில் உள்ளார். வடகிழக்கு மூலையில் ஏனோ சனிபகவான் ஒரு மாடம் கட்டிவைக்கப்பட்டு உள்ளார். கால சுழற்சியில் கோயில் மாற்றம் கண்டுள்ளது ஆனால் அகத்தியர் திருவடி பட்ட தலம்; அகத்தியர் அம்பிகையையும் சேர்த்து பூசித்த தலம் இது என்பது அபூர்வம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அம்மனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி