அனுமந்தபுரம் ஸ்ரீ வீரபத்திரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு
முகவரி
அனுமந்தபுரம் ஸ்ரீ வீரபத்திரர் திருக்கோயில், (பரிகார தலம்), அனுமந்தபுரம், செங்கல்பட்டு மாவட்டம்- 603108.
இறைவன்
இறைவன் : ஸ்ரீ அகோரவீரபத்திரர் இறைவி : ஸ்ரீ காளிகாம்பாள்
அறிமுகம்
சிவபிரானின் அம்சமான ஸ்ரீ வீரபத்திரர் ஸ்வாமி கோயில் சிங்கபெருமாள்கோவில் அருகில் சுமார் 9 கிமி. தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயம் சுமார் 3000 வருடங்கள் பழமையானது. தக்ஷன் சம்ஹாரம் ஆனபிறகு ஸ்ரீ வீரபத்திரஸ்வாமி மிக உக்கிரத்துடனும் பசியுடனும் இவ்விடம் வந்தபோது அன்னை காளி தேவி சர்க்கரைவள்ளி கிழங்கும் மலை தேனும் கொடுத்தும் ஸ்வாமிக்கு பசி அடங்கவில்லை. அம்பாள் வெற்றிலையை மடித்து கொடுத்தவுடன் பசி அடங்கியதுடன் உக்கிரமும் தணிந்தது. இங்கு மூலவர் ஸ்ரீ அகோரவீரபத்திரர். அம்பாள் ஸ்ரீ காளிகாம்பாள். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மட்டுமே உள்ளது. ஸ்ரீ துர்கை சன்னதி தனியாக உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. இரண்டு வேளை பூஜை இங்கு நடைபெறுகிறது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் காலை 7.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை பூஜை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு திரு செந்திகுமார்-94442 86077, திரு விக்னேஸ்வரன்-9976567410, திரு துரைசாமி- 9443616894
நம்பிக்கைகள்
பரிகார தலம்: ஏவல், பில்லி சூனியம் இவைகளுக்கு நிவாரணம் அளிக்கும் தலம். செவ்வாய் தோஷம் தணிக்கும் தலமாகவும் விளங்குகிறது. மாலை பூஜை முடிந்தவுடன் சிவாச்சாரியார் பக்தர்கள் தலையில் ஸ்வாமி விபூதி போட்டு பிரசாதம் கொடுப்பது எல்லா துர்சக்திகளையும் நீக்கவல்லது. இங்கு வெற்றிலை மாலை சார்த்துவது மிகவும் விசேஷம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அனுமந்தபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை