அகர முகுந்தனூர் இராமநாத சுவாமி சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
அகர முகுந்தனூர் இராமநாத சுவாமி சிவன்கோயில், அகரமுகுந்தனுர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609603.
இறைவன்
இறைவன்: இராமநாத சுவாமி இறைவி: பர்வதவர்த்தினி
அறிமுகம்
கொல்லுமாங்குடி- காரைக்கால் சாலையில் ஒன்பது கி.மீ. தூரத்தில் உள்ளது வேலங்குடி. இங்கிருந்து வடக்கு நோக்கிய சாலையில் ஒரு கி.மீ. தூரம் சென்றால் அகரமுகுந்தனுர் அடையலாம். சிறிய கோயில் தான், கிழக்கு நோக்கிய இறைவன் கருவறையும் தெற்கு நோக்கிய இறைவியின் கருவறையும் உள்ளன. ராமர் வழிபட்ட தலம் எனப்படுகிறது. முன்னர் நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததாக இவ்வூரில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. இறைவன் – ராமநாத சுவாமி இறைவி- பர்வதவர்த்தினி சிறிய கோயில் தான், இருந்தாலும் அதிக தெய்வ சன்னதிகள் உள்ளன. கருவறை கோட்டத்தில் தென்முகன், கருவறை பின்புறம் லட்சுமி நாராயணர், பிரம்மன் துர்க்கை உள்ளனர். பிரகார காம்பவுண்டிலேயே விநாயகர், வள்ளி தெய்வானை முருகன், ராமர் லட்சுமணர், சீதை, லட்சுமி ஆகியோரும், அனுமன், பைரவர், சூரியன் ஆகியோரும் உள்ளனர். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முகுந்தனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி