T.மணலூர் சிவன்கோயில், கடலூர்
முகவரி
T.மணலூர் சிவன்கோயில், T.மணலூர், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608305.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
காட்டுமன்னார்கோயிலில் இருந்து வீராணம் ஏரிக்கரை வழியாக சிதம்பரம் செல்லும் சாலையில் பத்தாவது கிமீ-ல் உள்ளது இந்த T.நெடுஞ்சேரி. தெற்குநாடு நெடுஞ்சேரி என்பதன் சுருக்கமே T.நெடுஞ்சேரி. இவ்வூரின் வடக்கில் செல்லும் சிறிய சாலையில் சென்றால் அடுத்த இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது T.மணலூர் உள்ளது. சோழர் காலத்தில் இப்பகுதி மேற்-கா நாடு எனவும், கீழ்-கா நாடு எனவும் தெற்குநாடு எனவும் அழைக்கப்பட்டது. கா-நாட்டு-மன்னனார்குடி என்பதே காட்டுமன்னார்குடி என வழங்கப்படுகிறது. இங்கு சாலையோர குளத்தின் அருகில் சிறிய சிவாலயம் இருந்து பின்னர் சிதைந்து பராமரிப்பில்லாமல் போனது அதனை தற்போது சிறிய கருவறை ஒன்றை கட்டி உள்ளனர். அதில் இறைவன் கிழக்கு நோக்கியுள்ளார் அருகில் கிழக்கு நோக்கி முருகனும் தனி சிற்றாலயத்தில் உள்ளார்.அருகில் அரசும் வேம்பும் இணைந்த மரத்தடியில் விநாயகர் அவரின் எதிரில் மூஞ்செலி வாகனம் ஒரு நாகரும் உள்ளனர். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
T.மணலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி