காரைக்குடி நகரின் அருகே உள்ள முத்துப்பட்டினம் எனும் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறாள் முத்து மாரியம்மன். சமயபுரத்திலிருந்து இங்குவந்து பல சித்து விளையாடல்கள் புரிந்த சிறுமி ஒருத்தியின் நினைவாக இந்தக் கோயில் அமைந்ததாகச் சொல்கிறார்கள். அந்தச் சிறுமியின் வேண்டுகோளின்படி இந்த ஆலயத்தில் அம்மனுக்குத் தக்காளிப் பழமே காணிக்கையாகத் தரப்படுகிறது. மேலும், அம்மனுக்குத் தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுவதும் இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும் Share….
Category: தமிழ்
காஞ்சீபுரம் வைரவேச்சுரம்
கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது. இதற்கு அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ளார். காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் பிரம்மதேவர் வழிபட்ட பைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது […]
கோவில்களின் தொன்மை குறித்த அறிவு இல்லை: முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் காட்டம்
செங்கல்பட்டு: -செங்கல்பட்டு, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி உடனுறை அருளாளீஸ்வரர் கோவில் உள்ளது. ஓராண்டாக, அந்த பகுதியைச் சேர்ந்த சிவா சங்கீதா, கோவில் பற்றி தெரிவித்தார். இந்த கோவில் கருவறை, விமானம் ஆகியவை, தற்போது காப்பாற்றப்பட்டு இருக்கிறது. சுற்றுச்சுவர்கள், உள்ளே இருந்த கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன. அந்த கோவிலை […]
வல்லப்பாக்கம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது. அப்பணியின் தொடா்ச்சியாக வல்லப்பாக்கம், அகத்தீசுவரா் கோயிலில் தொல்லியல் ஆலோசகா் ஸ்ரீதரன், செயல் அலுவலா் வேள் அரசு, ஆய்வா் திலகவதி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.அதில் அக்கல்வெட்டு 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனத் தெரிந்தது. இது தொடா்பாக தொல்லியல் ஆலோசகா் கி. ஸ்ரீதரன் கூறியதா வது: வல்லபாக்கம் கோயில் பாண்டிய மன்னன் சடையவா்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் கி .பி . […]
புலிக்கால் முனிவர் வழிபட்ட ‘நவ புலியூர்’ தலங்கள்
வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், சிவனின் ஆனந்தத் தாண்டவங்களை தரிசித்த தலங்கள் ‘நவ புலியூர்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது ஆலயங்களையும் மிகச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம். சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் காண மிகவும் ஆவல் கொண்டவர்கள், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் ஆவார்கள். இவர்களில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், சிவனின் ஆனந்தத் தாண்டவங்களை தரிசித்த தலங்கள் ‘நவ புலியூர்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது ஆலயங்களையும் மிகச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம். 1.பெரும்பற்றப்புலியூர் பிரசித்திப் பெற்ற […]
திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டரில் அமைந்துள்ளது ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் கொண்டது. இதில் ஏழுவது கிலோமீட்டரில் மைய பகுதியான அடி அண்ணாமலை கிராமத்தில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம் ஆகும். மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்காண் மாதே வருதியோ வன் செவலியோ நின் செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்திய வாழ்தொலி போய் வீதிவாய் கேட்டாலுமே விம்மி […]