Thursday Nov 21, 2024

கடவுள் அப்ப அப்ப தன்னை வெளிப்படித்திக்கொண்டேதான் உள்ளார், யார் மூலமாகவும்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள, திவ்ய தேசங்களில் ஒன்று, கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு, பஸ் வசதி கிடையாது. ஆட்டோ மற்றும் கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து இறங்குகின்றனர். தரிசனம் முடிந்ததும், திரும்ப ஆட்டோ பிடித்து செல்கின்றனர்.நான் சென்றிருந்த போது, கோவில் நடை சாத்தியிருந்தது. கோவிலுக்கு பக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து, அர்ச்சகர் ஒருவர் வெளியே வந்தார்.அவரை அணுகி, ‘சுவாமி தரிசனம் பண்ணனும்… நீங்க தானே அர்ச்சகர்?’ […]

Share....

பள்ளியறை பூஜையும் பலன்களும்!

சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை பள்ளியறை பூஜை ஆகும். அதாவது. சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப் பாடி பூஜிப்பது ஆகும். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும்போது, சிவபுராணம், பதிகங்கள் பாடி வர வேண்டும். இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ, […]

Share....

கோ பூஜை சிறப்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

நமது நாட்டில், ‘கோ’ எனும் பசுவை தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுவின் அனைத்து உறுப்புகளிலும் இந்திரன் முதலான தேவதைகள் இருப்பதால் கடவுளாகவும் வணங்குகிறோம். உயிருடன் தானம் செய்யக்கூடிய ஒரே பிராணி பசு மட்டுமே. சுத்தம் செய்யக்கூடிய கழிவுப் பொருள் பசுவினது கோமியம் மட்டுமே. கோ வதம் என்கிற பசுவினைக் கொல்லும் செயல் பிராயச்சித்தம் இல்லாத ஐந்து மஹா பாபங்களில் ஒன்றாகும். ‘தாய் – மாத்ரு’, ‘சிசு – […]

Share....

ஆடிமாத வெள்ளிக்கிழமையின் மகிமைகள்:

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச் சிறப்புண்டு. இம்மாத வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் மட்டுமின்றி, இம்மாதத்தில் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் திருமணமான பெண்கள் விரமிருந்தால், மாங்கல்ய பலம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இம்மாத வெள்ளிக்கிழமைகளில் யார் அம்மனை வேண்டி விரதமிருந்தாலும், அவர்கள் நினைப்பது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. அந்த வெள்ளிக்கிழமைக்குரிய அம்மனை […]

Share....

586 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வுமற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து ஆய்வு மேற்கொண்டதில், தீர்த்தம் அடுத்தஹளே கிருஷ்ணாபுரம் கிராமத்தில், 586 ஆண்டு பழமையான விஜயநகர காலத்து,கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்கூறியதாவது:பசப்பா என்பவரது வீட்டின் அருகே கருங்கல் குண்டை சுற்றிலும், 20 அடி நீளத்தில், 7வரிகளில் இக்கல்வெட்டு உள்ளது. மேல்புறம் திரிசூலமும், கீழ்புறம் அழகிய காளையும், அருகே குடை மற்றும் கொடியும் கோட்டுருவமாய் காட்டப்பட்டுள்ளன.இக்கல்வெட்டு, 586 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர மன்னர், […]

Share....

ஸ்ரீ சுந்தரானந்தர் சித்தர்

ஸ்ரீ சுந்தரானந்தர் சித்தர் சட்டமுனியின் சீடர் ஆவார். அவர் சித்தர் அகஸ்தியரின் சிவலிங்கத்தைப் பெற்று, சதுரகிரியில் ஸ்தாபித்து வழிபட்டதாக நம்பப்படுகிறது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தமிழ்நாட்டில் சாப்டூர் காப்புக்காடுகளின் தாணிப்பாறை பகுதியில் உள்ளது. இது விருதுநகர் மாவட்டம் வட்ராப்பில் அமைந்துள்ளது. சதுரகிரிக்கு அருகில் உள்ள பெரிய நகரம் ஸ்ரீவில்லிபுத்தூர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணர்ந்த ஞானிகளும் சித்தர்களும் “சுந்தர மகாலிங்கம்” என்று அழைக்கப்படும் சிவலிங்கத்தை வணங்கி வாழ்ந்தனர். “சுந்தரம்” என்றால், அழகானவர், “மஹா” என்றால் பெரியவர், லிங்கம் […]

Share....

ராமதேவர்

பிறப்பு: மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார்.வாழ்ந்த காலம்: 700 வருடம் 06 நாட்கள் வாழ்ந்து வந்தவர்.இறப்பு: அழகர் மலையில் சமாதியடைந்தார். உரோமரிஷி அல்லது யாக்கோபு சித்தர் என்றும் அழைக்கப்படும் ராமதேவர் சித்தர், சித்த அறிவியலின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பின் காரணமாக தமிழ் சித்த மருத்துவ அமைப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். மிகவும் மரியாதைக்குரிய சிந்தனையாளர் மற்றும் விடாமுயற்சியுள்ள ஆராய்ச்சியாளர், அவர் எளிய தமிழ் மொழியைப் பயன்படுத்தி சித்த அறிவியலில் சிக்கலான கருத்துக்களை விளக்கும் திறனுக்காக புகழ் பெற்றார். ஒரு […]

Share....

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவ விழா: 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ […]

Share....
Back to Top