இன்று காலை..8.30 மணியளவில்.. ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பிகா உடனுறை ஶ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி.மற்றம் பரிவார மூர்த்திகளுக்கு…25.. ஆண்டுகளுக்கு பிறகு.. கிராமவாசிகள்..மற்றும் பக்தர்கள் இனைத்து அபிஷேகம் செய்து.. வழிபாடு செய்து இருக்கிறார்கள்…. Share….
Category: தமிழ்
வெட்ட வெளியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர், சண்டிகேஸ்வரர், சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஏரி வேளூர் ஊராட்சி வேலாக்குடி கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே வெட்ட வெளியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர், சண்டிகேஸ்வரர், சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. ⚜️ இந்நிலையில் நேற்று (13.08.2023) கோவை அரன் பணி அறக்கட்டளை சிவனடியார்கள் ஊர்ப் பொது மக்களுடன் இணைந்து திருமேனிகளுக்கு பீடம் அமைத்து பிரதிட்டை செய்தனர். அக்னிபுரீஸ்வரர் உடனுறை கருந்தார்குழழி எனும் திருநாமம் இட்டு வழிபாடு செய்தனர். ⚜️ விரைவில் கோவை […]
வேலுக்கு அர்ச்சனை!
ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் என்ற ஊரில் வீரகுமாரசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு முருகப் பெருமான் வீரத் தோற்றத்தில் கன்னி குமரனாகக் காட்சி தருகிறார். ஆகவே, பெண்கள் கோயிலுக்குள் செல்லும் வழக்கம் இல்லை. மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்த கன்னியரையும், வீர குமாரரையும் வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது. சூரபதுமன் மனம் திருந்தி மயில் வடிவ மலையாக அமர்ந்து தவம் செய்து அருள்பெற்ற தலம் மயிலம்; திண்டிவனம் அருகிலுள்ளது. இங்கு கருவறை மண்டபத்துக்கு […]
ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை- சென்னை
பஞ்ச பூதங்களில் பிருத்வி எனப்படும் மண் தலமாக சென்னையில் அமைந்திருப்பது அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். இங்கு, இறைவன், ஏகாம்பரேஸ்வரர் மூலவராகவும், உற்சவராகவும் இருக்க, அம்மன்/தாயார்; காமாட்சி அம்பாள். இது சுமார் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். இந்த கோவில் திரிதள விமானம் மற்றும் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. Share….
ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?
கட்டுரை தகவல் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும்,தொழில் முறை சார்ந்தும் அமைந்திருந்தது. தமிழர்கள் வாழ்வில் கோவில்கள் முக்கியமான அம்சமாக இருந்துள்ளன. அக்கால மக்களின் வரலாற்றை நாம் அறிந்துக் கொள்ளும் ஆதாரமாக கோவில்களின் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்த கல்வெட்டுகள் பெரும்பாலும், அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், முக்கிய பிரமுகர்கள் பற்றியே அமைந்திருக்கும். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்பை கோவிலில் சாமானிய மக்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அக்கால […]
காலில் சங்கிலியுடன் அனுமன்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அமைந்துள்ளது மேல்முடியனூர். இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இந்த ஆஞ்சநேயரின் கால், கல்லால் செதுக்கப்பட்ட சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. ராம அவதாரம் முடிந்து, ராமபிரான் வைகுண்டம் புறப்படத் தயாரானார். அப்போது தன்னுடன் அனுமனையும் வரும்படி அழைத்தார். ஆனால் அனுமனோ, “பூலோகத்தில் எங்கெல்லாம் ராமகீர்த்தனம் கேட்கிறதோ.. அங்கேயே இருக்க விரும்புகிறேன்” என்று கூறிவிட்டார். ராமர் மீண்டும் அழைத்தால், அவர் மேல் உள்ள பக்தியில் மனம் […]
எண்ணிக்கை வடிவங்களில் விநாயகர்
முழு முதற்கடவுளான விநாயகப்பெருமான் உலகெங்கும் போற்றும் தெய்வமாகத் திகழ்கின்றார். இவரை ஒரு விநாயகர் முதல் கோடி விநாயகர் வரை எண்ணிக்கை வடிவங்களில் வழிபடுவதை இங்கே காண்போம். 1. ஏகதந்தன் ஏகம் என்பது ஒன்றைக் குறிப்பது. ஏகாட்சரன், ஏகதந்தன், ஒற்றைக்கொம்பன், ஒற்றை மழுவன் என ஒன்று எண்ணிகையில், விநாயகர் வணங்கப்படுகின்றார். 2. இரட்டைப் பிள்ளையார் ஒரு தெய்வத்தை இரண்டாக வைத்து வழிபடும் வழக்கம், பலநூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது. இவர் இரட்டைப் பிள்ளையார் என வழங்கப்படுகின்றார். இந்த […]
ச்ராத்தம் உண்டானது எப்படி?
உலகில் முதலில் ச்ராத்தம் உண்டானது எப்படி என்று அறிந்துகொள்வது அவசியம். அது ஸ்ரீமன் மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் 138வது அத்யாயத்தில் பரக்க நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம். அதைப்பற்றி ‘ஸ்ரீவேதாந்த தீபிகை’யில் அடியேன் படித்த ஒரு கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். ப்ருஹ்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மஹரிஷி உண்டானார். அந்த மஹரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் […]