Friday Nov 29, 2024

குன்றாண்டர்கோயில் குடைவரைக் கோவில், புதுக்கோட்டை

முகவரி

குன்றாண்டர்கோயில் குடைவரைக் கோவில், குன்றாண்டர்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு 622502

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

குன்றாண்டார்கோயில் குகைக்கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்திலுள்ள குன்றாண்டார்கோயிலில் பாறையை குடைந்து பல்லவ மன்னர்களின் கீழ் ஆட்சிபுரிந்த முத்தரையர் மன்னர்களால் கட்டமைக்கப்பட்ட குடைவரைக்கோவில் இதுவாகும். இது எட்டாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதன் நீட்டிக்கப்பட்ட கட்டிடப்பகுதியானது சாளுவ சோழ மன்னர்கள் மற்றும் விஜயநகர பேரரசினால் கட்டமைக்கப்பட்டுள்ளன. பிற்கால குடைவரை பிற்கால பல்லவர் மற்றும் சோழர் கலைப்பாணியில் உள்ளது. இங்கு பிற்கால சோழர்கள் , பாண்டியர்கள், மற்றும் விஜயாலய பேரரசின் கல்வெட்டுகளை கொண்டிருக்கும் ஒரு கற்கோயிலாக உள்ளது. தற்போது இக்கோயில் இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.

புராண முக்கியத்துவம்

குன்றாண்டார்கோயில் என்பது குன்று -ஆண்டான்-கோயில் என்கிற பொருள் படும் வகையில் குன்றை ஆட்சி செய்யும் இறைவனை முன்னிறுத்தி பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்பகுதியை ஏழாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் வரை பல்லவர்களின் கீழ் முத்தரையர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதன் பிறகு பிற்கால சோழர்களால் கைப்பற்றபட்டுள்ளது. குடைவறை கோவிலானது நந்தி வர்மன் பல்லவ மல்லன் என்றழைக்கப்பட்ட இரண்டாம் நந்தி வர்மன் பல்லவனின் (கி. பி. 710 – 775) துணை ஆட்சியாளராக விளங்கிய முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டுள்ளது. நந்திவர்மன் மற்றும் அவரது மகன் தந்திவர்மன் காலத்தைய முற்கால கல்வெட்டுகள் திருவாதிரை வழிபாட்டு நிகழ்வுக்கு கொடை வழங்கிய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளது. சௌந்தர ராஜன் என்பவர் எட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று உரைக்கிறார். இது தவிர்த்த ஏனைய கல்வெட்டு பொறிப்புகள் சோழர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள்,விஜயநகர பேரரசை சார்ந்தவையாக உள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் கிராமமானது கள்ளர் சமூகத்தினரால் இரு பகுதியாக பிரிக்கப்பட்டது இங்குள்ள கல்வெட்டுகளில் தவறு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், வரி வசூல் செய்யும் நடைமுறைகள் குறித்த கல்வெட்டுகள் உள்ளன.

சிறப்பு அம்சங்கள்

தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் குன்றாண்டார்கோயில் ஒரு பாறையில் அமைந்த குடைவறை கோவிலாகும் அது மட்டுமின்றி குடைவறையில் மாறுபட்ட நிலைகளில் சிவன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. லிங்க வடிவிலான மூலவர் கிழக்கு நோக்கிய திருகுன்றக்குடி ஈசனை பர்வதகிரீசுவரராக வழிபடுகின்றனர். கருவறையும் அர்த்த மண்டபமும் எவ்வித வேலைப்பாடுகளுமின்றி உள்ளன. அறையை கல்தூண்கள் தாங்கி நிற்கின்றன.மூலவரின் இருபுறங்களிலும் துவாரபாலகர் சிலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு சிலை முததரையர் என்றும் ஏனையது அவரது உதவியாளர் எனவும் கருதப்படுகிறது. குடைவறை கட்டிடக்கலைக்கான சோழர் கலைப்பாணி மற்றும் பல்லவ கட்டிடக்கலைக்கான உதாரணமாகும் இங்கு உள்ள சிவன் பார்வதி மற்றும் சேயோன் முருகனோடு காட்சிதரும் மிக முக்கியமான இளமுருகன் வெண்கலச்சிலை மண்டபத்தின் மத்தியில் நிலையாக வைக்கப்பட்டுள்ளது.

காலம்

8 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குன்றாண்டர்கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top