ஸ்ரீராமர் பாதம் கோவில், நாகப்பட்டினம்
முகவரி
ஸ்ரீராமர் பாதம் கோவில், வேதாரண்யம் – கோடியக்கரை சாலை, ஸ்ரீராமர் பாதம், நாகப்பட்டினம் மாவட்டம் – 614807.
இறைவன்
இறைவன்: இராமர்
அறிமுகம்
வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீராமர் பாதம் என்ற இடம் உள்ளது இருபது முப்பது படிக்கட்டுகள் ஏறிச் சென்றால் ஒரு சிறிய மண்டபத்தில் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்தே கோடியக்காடு காட்டுப் பகுதி மற்றும் வனவிலங்கு சரணாலய எல்லை ஆரம்பமாகிறது. இந்த இடத்திற்கு மேற்கே பேவர் பிளாக் பதிக்கப்பட்டு ஒரு பாதை செல்கிறது. அந்தப் பாதையில் சுமார் ஆள் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஆள் அரவமற்ற இடத்தில் .அங்கே இடிந்த நிலையில் ஒரு கோவில் அமைந்துள்ளது. அனேகமாக அது ராமர்கோவிலாக இருந்திருக்கலாம். ஒரே ஒரு சன்னதி மட்டுமே உள்ளது. இக்கோவில் செங்கல் தளி கட்டுமானம் கொண்டது. விமானம் இல்லை, நான்கு பக்க சுற்று சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அந்த சுற்றுச் சுவர்களும் உடும்பு பிடியாய் ஒரு மரத்தின் கோரப்பிடியில் அகப்பட்டிருக்கிறது. உள்ளே எந்த விக்ரகங்களும் இருந்ததற்கான சுவடு இல்லை. வங்கக்கடலில் உருவான எத்தனை புயல்களை கண்டிருக்கும் இந்த கோயில் ! இன்றும் தன் மிச்சத்தை இந்த பூமியின் மீது எச்சமாய் நிலை நிறுத்திக் கொண்டு கம்பீரமாய் நிற்கின்றது!!
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோடியக்கரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி