வையங்குடி பசுபதி ஈஸ்வரர் சிவன் கோயில், கடலூர்
முகவரி :
வையங்குடி பசுபதி ஈஸ்வரர் சிவன் கோயில்,
வையங்குடி, திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 606111.
இறைவன்:
பசுபதி ஈஸ்வரர்
அறிமுகம்:
பெண்ணாடம்- இறையூர்- தொளார்- வையங்குடி என செல்லவேண்டும். சிறிய கிராமம், சுற்றிலும் பருத்தி பூத்து நிற்கிறது, சோளம் ஒடிக்கப்பட்டு தட்டைகள் காய்ந்து காற்றில் சலசலக்கும் ஓசையை தவிர வேறு சப்தமின்றி அமைதியாக இருக்கிறது கிராமம். இதோ இந்த சிவாலயம் வருவாரின்றி புதர் மண்டி கிடக்கிறது. எம்பெருமான் உடுத்த வேட்டியின்றி, காண வருத்தமாய் உள்ளது. அப்பனுக்கும் இல்லை பிள்ளைக்கு எங்கே கிடைக்கும்!! விநாயகனும் அவ்வாறே. ஆனால் நந்திக்கு மட்டும் யாரோ வேட்டி போர்த்தி சென்றிருக்கின்றனர். பசுபதி ஈஸ்வரர் கருவறை மட்டும் உயர்ந்த பல படிக்கட்டுகள் மேலே ஏறும் வண்ணம் உள்ளது கருவறைக்கு விமானம் இல்லை, தென்புறம் நோக்கியபடி அம்பிகை கோட்டம் பெயர் தெரியவில்லை சுற்றிவர வழியில்லை, தென்முகன் தரையில் அமர்ந்திருக்கின்றார். லிங்கோத்பவர் மாடத்தில்லுள்ளார். பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நின்றுபோயுள்ளது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வையங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருதாச்சலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி