Monday Jan 27, 2025

வேப்பஞ்சேரி லட்சுமிநாராயண பெருமாள் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி :

அருள்மிகு லட்சுமி நாராயணபெருமாள் திருக்கோயில்,

வேப்பஞ்சேரி, சித்தூர் மாவட்டம்.

ஆந்திரா மாநிலம் – 517125.

இறைவன்:

லட்சுமி நாராயணபெருமாள்

அறிமுகம்:

கொடிய பாவங்களை போக்கும் பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளி இருப்பதால் இத்தலத்திற்கு வேப்பஞ்சேரி என பெயர் வந்தது என்பர். வெம்+பஞ்ச்+ஹரி என்ற மூன்று சொற்களைக் கொண்டது. வெம்-பாவங்கள், பஞ்ச என்றால் ஐந்து, ஹரி என்றால் பாவத்தை நீக்குபவர். கோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரகபாலகரையும் வழிபடலாம். கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் அமர்ந்துள்ளார்.  ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீனிவாசபெருமாள் அமர்ந்துள்ளார். சகல பாவத்தையும் போக்கும் சுதர்சன சக்கரமும் அமைந்துள்ளது. ஆழ்வார்களும் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். லட்சுமிதேவியை தன் மடி மீது அமர வைத்துத், சாந்தமாக லட்சுமி நாராயணர் காட்சி தருகிறார். இந்த அதிசய லட்சுமி நாராயணனை தரிசிக்க ஆந்திராவிலுள்ள வேப் பஞ்சேரி செல்ல வேண்டும்.

புராண முக்கியத்துவம் :

ஆந்திர மாநிலத்தில் 750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் இக்கோயில் அமையப்பெற்றது. பின்னர் அடுத்தடுத்து நடந்த படையெடுப்பு காரணமாக கோயிலின் பெருமை குறைந்தது. பசு வளர்ப்பு, விவசாயம் இக்கிராமத்துத் மக்களின் முக்கிய தொழில். மழை பொய்த்ததால் விவசாயம் பாதித்தது; கால்நடைகள் தீவனம் இன்றி தவித்தன; பசி, பட்டினியால் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இவைகளுக்கு காரணம் தெரியாமல் மக்கள் தவித்தனர். நாளடைவில் விடைதேடிய கிராம மக்கள் ஒன்று கூடினர்; விவாதித்தனர். வேப்பஞ்சேரியின் காக்கும் கடவுளான லட்சுமி நாராயணனுக்கு கடந்த காலங்களில் பூஜை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தனர். அப்போது அசரீரியாக ஒலித்த குரல், “எனக்கு முன் போல் நித்ய பூஜைகளும், அபிஷேகங்களும், குறைவில்லாமல் செய்து வந்தால், என்னுடைய அருளால் இக்கிராமம் செழிக்கும், குலம் விளங்கும், மாடு, கன்று, பயிர்கள் செழிக்கும்; உங்களின் பாவங்களிலில் இருந்து விடுதலையும் கிடைக்கும்’ என்று கூறியது. இதை தொடர்ந்து இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, நித்ய பூஜைகளும், பிரம்மோற்சவம் முதலான விழாக்களும் நடந்து வருகின்றன.

நம்பிக்கைகள்:

திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கடன் பிரச்சனை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற, உடல்நலம் குன்றியோர், தொழில் பாதிப்படைந்தோர் இக்கோயிலுக்கு வந்து முறையாக பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை . இக்கோயிலின் தென்புறம், ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் மது அருந்துபவர்கள் மனம் திருந்துகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் ராகுகால பூஜையில் பங்கேற்று பல நன்மைகள் அடைகின்றனர். லட்ச தீப வழிபாட்டில் கோடி நன்மைகள் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்:

கோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரபாலகரையும் வழிபடலாம். கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் அமர்ந்துள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீனிவாசபெருமாள் கண்ணைக்கவரும் விதத்தில் அமர்ந்துள்ளார். சகல பாவத்தையும் போக்கும் சுதர்சன சக்கரமும் அமைந்துள்ளது. ஆழ்வார்களுக்கும் இக்கோயிலில் இடம் உண்டு. கோயிலுக்கு தசாவதார தீர்த்தக்குளமும் உண்டு. குளத்து நீர் இனிப்பு சுவையுடன் உள்ளது. பாவங்களை போக்கி பரிகாரம் செய்ய பயன்தருகிறது. இக்குளத்தை சுற்றி அழகிய வேலைபாடுகளுடன் கூடிய, தசாவதார சிலைகள் தனித்தனியே அமைத்துள்ளனர். குளத்தின் நடுவே நீரில் காளிங்க நர்த்தனம் புரிபவராக கிருஷ்ணர் அமைந்துள்ள காட்சியை காணகண்கள் கோடி வேண்டும். குளத்தின் அருகிலேயே, 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் அழகிய வேலைபாடுகளுடன், பத்துத் அவதாரங்களுடன் கிருஷ்ணரின் தசாவதார சிலையை தரிசிக்காமல் வரமுடியாது. இக்கோயிலின் தென்புறம், ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் மது அருந்துபவர்கள் மனம் திருந்துகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ராகுகால பூஜையில் பங்கேற்று பல நன்மைகள் அடைகின்றனர். லட்ச தீப வழிபாட்டில் கோடி நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துத் வருகிறது.      

திருவிழாக்கள்:

கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி

காலம்

750 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வேப்பஞ்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சித்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருப்பதி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top