வேட்டையம்பாடி சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
வேட்டையம்பாடி சிவன்கோயில்,
வேட்டையம்பாடி, மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609201.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து மணல் மேடு சாலையில் எட்டு கிமீ தூரம் சென்றால் உப்பனாறு அதனை கடந்து வலதுபுறம் விராலூர் வழி நான்கு கிமீ தூரம் சென்றால் இந்த வேட்டையம்பாடி அடையலாம் ஊரின் முகப்பில் சாலையை ஒட்டி ஒரு சிறிய தகர கொட்டகையில் எம்பெருமான் உள்ளார். ஒன்றை லிங்கத்தை வழிபடுவது ஏக லிங்க வழிபாடாகும். ஒற்றை லிங்கத்தை உடையவர் எனவும், மகாதேவர், எனவும் அழைக்கின்றனர். கோயில் இவ்வூரில் இருந்ததா? இறைவன் பெயரென்ன? பிற மூர்த்தங்கள் என்னவாயின? பல கேள்விகளுக்கு பதில் இல்லை. ஊர்மக்கள் தங்கள் பிரச்சனைகள் சொல்லி தீர்வு கேட்க ஒரு இடம் வைத்துள்ளனர் அந்த இடம் தான் இந்த சிவாலயம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேட்டையம்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
கடலூர்