விஷ்னு கோயில், மொரேனா மாவட்டம், மத்திய பிரதேசம்
முகவரி
விஷ்னு கோயில், மிட்டோலி, மொரேனா மாவட்டம், மத்திய பிரதேசம் – 476 444
இறைவன்
இறைவன்: விஷ்னு
அறிமுகம்
இக்கோவில் மொரேனா மாவட்டம் மிட்டோலி நகரத்தில் அமைந்துள்ளது. கார்ஹி பாதவளி கோட்டை சிவன் கோவிலை அடுத்து படேஸ்வர் தொகுப்பு கோவில்களுக்கு போகின்ற வழியில் விஷ்ணு கோவில் உள்ளது. இருபத்தி ஐந்து படிக்கட்டுகளை கடந்து மேல சென்றால் சிதிலமடைந்த கோவில் உள்ளது. ஆனால் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணம் இக்கோவில் உள்ளன. கலை வண்ணம் கமழும் மகரதோரணம் ஒன்றே கச்சப்ப ஃகடா பேரரசின் கட்டிடக்கலைக்கு சான்று கூறுவதுப்போல் உள்ளது. இக்கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டை சார்ந்தது. அதுபோக கோவிலை சுற்றி கண்களுக்கு விருந்தாய் சிற்பங்களும் அதன் அமைப்பும் அபாரம். குறிப்பாக அபூர்வமான வீணாதரர் எட்டு கரங்களுடனும், அழகான நாட்டியமாடும் விநாயகர் சிற்பம் ஒன்னு கோவில சுற்றி வரும் போது வலது புறமாக உள்ளது.
காலம்
12 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மிட்டோலி
அருகிலுள்ள இரயில் நிலையம்
குவாலியர்
அருகிலுள்ள விமான நிலையம்
குவாலியர்