விளத்தூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
விளத்தூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
விளத்தூர், திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610201.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் உள்ளது பாங்கல் இங்கிருந்து பாமந்தூர் சாலை ஒன்று மேற்கு நோக்கி செல்கிறது அதில் அரை கிமீ தூரம் சென்றால்இந்த விளத்தூர் அடையலாம். சிறிய ஊர் தான் என்றாலும் இங்கு சிவன்கோயில் ஒன்றும் வைணவ கோயில் ஒன்றும் ஐயனார் கோயில் ஒன்றம் உள்ளன. இரு பெரிய குளங்களின் நடுவே செல்லும் சாலையை ஒட்டி சிவன் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது.
இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி ஆனந்தவல்லி
அகத்தியர் வழிபட்டதால் இப்பெயர் என்கின்றனர். அகத்தீஸ்வரர் பெயர் கொண்ட தலங்கள் இவ்வூரை சுற்றி பல உள்ளன. பழமையான கோயில் சிதைவடைந்த பின்னர் புதிய கோயில் எழும்பி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியவராகவும் அம்பிகை தெற்கு நோக்கியவராகவும் உள்ளனர். இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். அவரின் எதிரில் பழமையான நந்தியும் ஒரு மோதக விநாயகரும் உள்ளனர். இவர் கொடிமர விநாயகராக இருந்திருக்கலாம். விநாயகரை பார்க்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை இருக்கலாம்.
அம்பிகை ஆனந்தவல்லி கருவறை தனித்து தெற்கு நோக்கி உள்ளது. இறைவன் கருவறை கோட்டங்களில் தக்ஷணமூர்த்தி, லிங்கோத்பவர் பிரம்மன் என உள்ளனர். பிரகார சிற்றாலயங்களில் வலம்புரி விநாயகர் முருகன் கஜலட்சுமி உள்ளனர் சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். வடகிழக்கில் மேற்கு நோக்கிய காசி விஸ்வநாதர் ஒரு சிற்றாலயத்திலும், நவகிரகங்கள், பைரவர் சூரியன் சந்திரன் ஆகியோர் தனி தனி மாடங்களில் உள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விளத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி