வாழ்குடி விஸ்வநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
வாழ்குடி விஸ்வநாதர் திருக்கோயில், வாழ்குடி, வழி திருவிற்குடி, வழி கங்களாஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம் – 610101
இறைவன்
இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி
அறிமுகம்
ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயம்,வாழ்குடி எனும் திருவிடைவாய்க்குடி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தமிழ் நாடு திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரி வந்து, நாகூர் சாலையில் திரும்பி, விற்குடி இரயில்வே கேட்டைக் கடந்து, பயத்தங்குடி, திருமருகல் சாலையில் சென்று வாக்குடியை அடையலாம். திருவிடைவாய்க்குடி என்னும் இவ்வூர் தற்போது வாக்குடி என்று வழங்குகிறது. சிலர் வாழ்குடி என்றும் கூறுவர். ஊர்த் தொடக்கத்திலேயே கோயில் உள்ளது. பழமையான சிறிய கோயில். கோயிலின் பக்கத்தில் குளம் உள்ளது. இக்கோயிலுள்ள இறைவனை விஸ்வநாதர் என்றும் இறைவியை விசாலாட்சி என்றும் அழைக்கப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வாழ்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி