வண்ணகுடி சிவன் கோயில்
முகவரி
வண்ணகுடி சிவன் கோயில், வண்ணகுடி, திருவிடைமருதூர் வட்டம் தஞ்சை மாவட்டம்,
இறைவன்
இறைவன்: வண்ணகுடி சிவன்
அறிமுகம்
மயில் தோகையாக விரிந்திருக்கும் காவிரியின் வடிநிலப்பகுதியில் மணலுக்கு ஈடாக லிங்கங்கள் இருந்திருக்கும் போலிருக்கிறது, அப்படி கோயில் கொண்டிருந்த லிங்க மூர்த்திகளில் ஒன்றுதான் இன்று வயல்வெளியின் நடுவில் ஒரு உயரமான களத்து மேட்டின் மேல் அமைந்திருக்கும் சிவலிங்கம். ஆடுதுறை அருகில் உள்ள கோவிந்தபுரம் பாண்டுரங்கர் கோயிலுக்கு எதிரில் செல்லும் வண்ணக்குடி சாலையில் உள்ளது. காலப்போக்கில் அப்பகுதி விவசாயிகளால் மண்மேடு கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுக்கப்பட்டு சிவலிங்கம் இருக்குமிடம் மட்டும் ஒரு திட்டு போல் உள்ளது. . தற்போது சிவலிங்கம் இருந்த இடம் சற்றே சீரமைக்கப்பட்டு சிறிய தகர கொட்டகை கோயிலாகக் காட்சியளிக்கிறது. இந்த இறைவன் கிழக்கு நோக்கியுள்ளாரா அல்லது மேற்கு நோக்கியுள்ளாரா என கணிப்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். அவ்வப்போது வருவோர் போவோர் மட்டும் வழிபடுகிறனர். விசேஷ நாட்களில் வழிபாட்டு மன்றத்தின் அன்பர்கள் அபிஷேகம் அலங்காரம் என செய்கின்றனர். சிரமத்திலுள்ளவரை சென்று பார்ப்பதே நல்லோருக்கழகு. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வண்ணகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி