வட்டத்தூர் யோகேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
வட்டத்தூர் யோகேஸ்வரர் சிவன்கோயில்
வட்டத்தூர், ஸ்ரீமுஷ்ணம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608702.
இறைவன்:
யோகேஸ்வரர்
இறைவி:
யோகேஸ்வரி
அறிமுகம்:
இந்த வட்டத்தூர் ஊர் எங்குள்ளது என்றால் கும்பகோணம்- சேத்தியாதோப்பு சாலையில் உள்ள சோழத்தரம் என்ற ஊரின் வடக்கில் 4 கிமீ தூரத்தில் உள்ளது. பிரதான சாலையில் இருந்து ஊர் ½ கிமீ தூரம் உள்ளே செல்லவேண்டும். வீராணம் எனப்படும் வீரநாராயணன் ஏரி இராஜாதித்ய சோழன் என்னும் இளவரசரால் கி.பி. 907 முதல் 953 வரை வெட்டப்பட்டது. இராஜாதித்ய சோழன் தந்தையான முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீரநாரயணன் ஆகும். இப்பெயரே வீரநாரயணன் ஏரி என அழைக்கப்பட்டது, கால போக்கில் இப்பெயர் வீராணம் ஏரி என அழைக்கப்பட்டது. இந்த ஏரியின் மேற்கு கரையில் தான் நாம் காணும் இந்த வட்டத்தூர் அமைந்துள்ளது.
இந்த ஏரியினை வெட்டிய படையினர் தங்கிய இடம் தான் இந்த வட்டத்தூர். இதற்க்கு ஆதாரமாக இங்கு படைவீட்டம்மன் கோயில் அமைந்துள்ளதை காணலாம். இவ்வூரில் ஒரு சிவன்கோயிலும், ஒரு வரதராஜ பெருமாள் கோயிலும் ஒருபடைவீட்டம்மன் கோயிலும் அமைந்துள்ளன. சிவன்கோயில் சிறியதாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் கருவறை வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். இறைவி தெற்கு நோக்கியுள்ளார். இறைவன் எதிரில் ஒரு நந்தி மண்டபமும் உள்ளது. இறைவன்- யோகேஸ்வரர் இறைவி யோகேஸ்வரி கருவறை தென்புறத்தில் தக்ஷணமூர்த்தியும் வடபுறம் துர்க்கையும் உள்ளனர். வடக்கில் சண்டேசர் உள்ளனர்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வட்டத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி